பிலிப்பைன் ஏர்லைன்ஸ்

பிலிப்பீன் ஏர்லைன்ஸ் (Philippine Airlines) 1941 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆசியாவில் உண்மையான பெயருடன்[1] தற்போதும் இயங்கி வருகின்ற பழமையான விமான நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. இதன் தலைமையகங்களாக மணிலாவின், நினாய் அக்யுனோ சர்வதேச விமான நிலையமும், செபுவின் மாக்டன் - செபு சர்வதேச விமான நிலையமும் உள்ளன. பிலிப்பைனின் 31 இடங்களையும், வெளிநாடுகளில் 36 இடங்களையும் இலக்காகக் கொண்டு இவை செயற்படுகின்றன. தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியனியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வெளிநாடுகளை இலக்காகக் கொண்டு பிலிப்பைன் ஏர்லைன்ஸ் நிறுவனம் செயற்படுகிறது.

பிலிப்பீன் ஏர்லைன்சு
Philippine Airlines
IATA ICAO அழைப்புக் குறியீடு
PR PAL PHILIPPINE
நிறுவல்நவம்பர் 14, 1935 (1935-11-14)
செயற்பாடு துவக்கம்மார்ச்சு 15, 1941 (1941-03-15)
மையங்கள்நினோய் அக்கீனோ பன்னாட்டு விமான நிலையம்
இரண்டாம் நிலை மையங்கள்மக்தான்-சேபு பன்னாட்டு விமான நிலையம்
கவன செலுத்தல் மாநகரங்கள்கலிபோ பன்னாட்டு விமான நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்Mabuhay Miles
கிளை நிறுவனங்கள்PAL Express
வானூர்தி எண்ணிக்கை50
சேரிடங்கள்74
தாய் நிறுவனம்LT Group Inc.
தலைமையிடம்PNB Financial Center, Pres. Diosdado Macapagal Avenue, CCP Complex, Pasay City, Philippines
RevenueIncrease PHP27 பில்.(ஐஅ$618.3 மில்.)(2Q2014)
நிகர வருவாய்Increase PHP1.5 பில்.(ஐஅ$34.3 மில்.)(2Q2014)
பணியாளர்கள்அண். 5,000
வலைத்தளம்www.philippineairlines.com

1997 ஆம் ஆண்டு ஆசியாவில் ஏற்பட்ட பலதரப்பட்ட நிதி நெருக்கடியால் பிலிப்பைன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. அந்நேரத்தில், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்கள் செலுத்துவது குறைக்கப்பட்டன. அத்துடன் மணிலாவில் இருந்து புறப்படும் விமானச் சேவைகள் தவிர பிற விமானச் சேவைகளை இரத்து செய்யத் தொடங்கினர். அவர்களின் விமானக் குழுக்களின் அளவினையும் குறைத்தனர். பின்னர் 1998 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் மூலம் பிலிப்பைன் ஏர்லைன்ஸ் மீண்டும் பழைய இடத்தினைப் பிடித்தது. தற்போது சுமார் 5000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.

இலக்குகள்

தொகு

பிலிப்பைன் ஏர்லைன்ஸின் செயல்பாட்டு மையங்கள் மணிலா மற்றும் செபுவில் இருந்தாலும், மணிலாவில் இருந்துதான் பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படுகின்றன. பிலிப்பைன் ஏர்லைன்ஸின் முக்கிய இலக்குகளாக ஆசிய-பசுபிக் நாடுகள், வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவினைக் கொண்டுள்ளன. முக்கியமாக வெளிநாடுகளில் வாழும் பிலிப்பைன் நாட்டு மக்களைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது. பிலிப்பைன் ஏர்லைன்ஸ் தற்போது மணிலா - ஜெனரல் சான்டோஸினை முக்கியமான உள்நாட்டு இலக்காகவும், இரு செயல்பாட்டு மையங்களைத் தவிர்த்த வழித்தடங்களான டார்வின் – பிரிஸ்பான் மற்றும் வான்கௌவெர் – டொரன்டோ ஆகியவற்றையும் இலக்குகளாகக் கொண்டுள்ளன.

இதற்கு முன்னர் பல செயல்பாட்டு மையங்களற்ற இடங்களுக்கு பிலிப்பைன் ஏர்லைன்ஸ் தனது சேவையினை புரிந்தனர். அத்துடன் எந்தவித இடங்களிலும் நிறுத்தமற்ற சேவைகளையும் புரிந்தனர். இந்தச் சேவைகள் குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் செயல்படுத்தப்பட்டன. ஆசியாவின் நிதி பிரச்சினையால் இது போன்ற பல சேவைகள் நிறுத்தப்பட்டன. பிலிப்பைன் ஏர்லைன்ஸின் உள்நாட்டு செயல்பாட்டுப் பாதைகளான மணிலா – நாகா, மணிலா - டுகேகரௌ மற்றும் தற்போது மணிலா – ஓஸமிஸ் போன்றவை ஏர்பில் எக்ஸ்பிரஸால் எடுத்துக்கொள்ளப்பட்டன. அத்துடன் மணிலா – செபு நகரம், டவௌ நகரம், லெகஸ்பி நகரம், புரெடோ பிரின்செஸா, புட்டுவன், ககயன் டி ஓரோ, கொடபடோ நகரம், டிபோலோக், ஸம்பௌங்க நகரம், டுமங்குட் மற்றும் டக்ளோபன் போன்ற இடங்கள் ஏர்பில் எக்ஸ்பிரஸால் நடத்தப்பட்டன. மார்ச் 1, 2014 முதல் இவற்றை பிலிப்பைன் ஏர்லைன்ஸ் நிறுவனமே நடத்துகிறது.[2]

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்

தொகு

அக்டோபர் 2014 வரை பிலிப்பைன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கோட்ஷேர் ஒப்பந்தங்கள் செய்து கொண்ட பிற ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பட்டியல் பின்வருமாறு:

  1. அனைத்து நிப்பான் ஏர்வேய்ஸ்
  2. கத்தே பசுபிக்
  3. எடிஹட் ஏர்வேய்ஸ்
  4. கல்ஃப் ஏர்
  5. மலேசிய ஏர்லைன்ஸ்
  6. பிலிப்பைன் ஏர்லைன்ஸ் (இணைப்பு நிறுவனம்)

பிலிப்பைன் ஏர்லைன்ஸின் உயர்தர வழித்தடங்கள்

தொகு

பிலிப்பைன் ஏர்லைன்ஸின் முக்கிய இடங்களான மணிலா – கடிக்ளன், கடிக்ளன் – மணிலா, செபு – மணிலா மற்றும் டவௌ – மணிலா போன்ற வழித்தடங்களில் முறையே வாரத்திற்கு 49, 49, 38 மற்றும் 32 விமானங்கள் செலுத்தப்படுகின்றன.

விமானக் குழு விவரங்கள்

தொகு

டிசம்பர் 2014 ன் படி, பிலிப்பைன் ஏர்லைன்ஸ் (பிலிப்பைன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினைத் தவிர) மொத்தம் ஐம்பது விமான்ங்களைக் கொண்டுள்ளது. இவற்றின் சராசரி வயது 3.9 ஆண்டுகள் ஆகும்.[3] இந்த விமானங்கள் அனைத்தும் பிலிப்பைன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது அல்லது GECAS இடமிருந்து வாடகைக்கு புதிதாக வாங்கப்பட்டது. இவற்றுள் A340-300 ரக ஆறு ஏர்பஸ் விமானங்கள் அடங்காது (RP-C3435, RP-C3436, RP-C3437, RP-C3438, RP-C3439 மற்றும் RP-C3441). இதற்குமுன் பயன்படுத்தப்பட்ட விமான்ங்களின் எண்ணிக்கை மற்றும் விமான ரகங்கள், அவை விமானச் சேவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நாள் போன்றவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

விமானம் மொத்தம் சேவையில் இருந்து வெளியேற்றப்பட்டது
ஏர்பஸ் A300B4 13 ஏப்ரல் 24, 1996
ஏர்பஸ் A319-100 4 -
ஏர்பஸ் A330-300 8 ஆகஸ்ட் 31, 2014
ஏர்பஸ் A340-200 4 1998
ஏர்பஸ் A340-300 8 நவம்பர் 2014
BAC 1 – 11 400 வரிசை - -
BAC 1 – 11 500 வரிசை - -
பீச் மாதிரி 18 - -
போயிங்க் 707 - -
போயிங்க் 727-100 - -
போயிங்க் 737-200 - -
போயிங்க் 737-200 14 -
போயிங்க் 737-300 3 ஏப்ரல் 2008
போயிங்க் 747-200B 13 2001
போயிங்க் 747-400 5 செப்டம்பர் 1, 2014
காண்வாயர் 340 எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு
டி ஹாவிலான்ட் DHC-3 ஓட்டர் - -
டௌக்லஸ் DC-3 - -
டௌக்லஸ் DC-4 - -
டௌக்லஸ் DC-6 - -
டௌக்லஸ் DC-8 - -
போக்கர் 27 - -
போக்கர் F50 / F60 11 டிசம்பர் 1999
ஹாவ்கர் சிடெலே HS 748 - -
ஹில்லர் UH-12 - -
மெக்டொனல் டௌக்லஸ் DC-10-30 - -
மெக்டொனல் டௌக்லஸ் MD-11 4 ஜூலை 1998
NAMC YS-11 - -
நூர்டையூன் நோர்ஸ்மேன் C-64 - -
ஸ்காட்டிஸ் ஏவியேஷன் டிவின் பயனெர் II - -
ஷார்ட்ஸ் SD360 - -
விக்கெர்ஸ் விஸ்கவுன்ட் 700 - -

சம்பவங்கள் மற்றும் விபத்துகள்

தொகு
 
A Philippine Airlines Airbus A340-200 about to land at Kai Tak Airport.

1941 ஆம் ஆண்டிலிருந்து பிலிப்பைன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பல விபத்துக்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றுள் பெரும்பாலானவை புரொப்பல்லர் ரக விமானங்களினால் ஏற்பட்டவையாகும். பிலிப்பைன் ஏர்லைன்ஸின் 434 விமானம் அல்–கொய்தா தீவிரவாத அமைப்பால் பாதிப்படைந்ததுதான், இதுவரை இந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளில் மிகவும் பெரியது. சர்வதேச வான்வழி போக்குவரத்து அமைப்பிற்கு பிலிப்பைன் நாட்டில் இருந்து அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே நிறுவனம் பிலிப்பைன் ஏர்லைன்ஸ் மட்டுமே இந்த அனுமதி பிப்ரவரி மாதம் 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Donohue, Ken (Apr 2012). "Philippine Airlines: Asia's first, striving to shine". Airways (Sandpoint, Idaho) (Sandpoint, Idaho: Airways International, Inc.) 19 (2):". 26–33. ISSN 1074-4320.OCLC 29700959.
  2. "Philippine Airlines". Cleartrip.com. Archived from the original on 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.
  3. "Philippine Airlines Fleet Details and History". Archived from the original on 2012-08-26. பார்க்கப்பட்ட நாள் 30 October 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பைன்_ஏர்லைன்ஸ்&oldid=3633407" இலிருந்து மீள்விக்கப்பட்டது