பில்லேசுவர் தேவாலயம்
இந்தியாவின் அசாமில் உள்ள இந்துக் கோவில்
பில்லேசுவர் தேவாலயம் (Billeswar Devalaya) இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பாரியில் உள்ள ஒரு பழமையான இந்து கோவிலாகும். இக்கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.[1] துர்கா பூசையின் போது எருமை உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை பலியிடுவது இந்த கோவிலில் பழங்கால பாரம்பரியம் மற்றும் சடங்காகும். இச்சடங்கு பலியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வணங்குவர்.[2]
பில்லேசுவர் தேவாலயம் Billeswar Devalaya | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | அசாம் |
மாவட்டம்: | நல்பாரி மாவட்டம் |
அமைவு: | பெல்சோர், நல்பாரி மாவட்டம், அசாம் |
ஆள்கூறுகள்: | 26°22′54.6″N 91°21′09.4″E / 26.381833°N 91.352611°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து கோயில் கட்டடக்கலை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Billeswar Devalaya". Nalbari District Website, Government of Assam.
- ↑ "Over 50 Buffaloes Sacrificed Across Assam During Durga Puja". Time8 (in ஆங்கிலம்). Archived from the original on 21 July 2021. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.