பிளெமியத் தொடுப்பு
பிளெமியத் தொடுப்பு என்பது ஏறத்தாழ ஒரே அளவு விட்டம் கொண்ட இரண்டு கயிறுகளைத் தொடுப்பதற்கு உதவும் ஒரு முடிச்சு ஆகும். இது "எட்டு வடிவத் தொடுப்பு", "இரட்டை எட்டு வடிவத் தொடுப்பு" என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுவது உண்டு.
பிளெமியத் தொடுப்பு | |
---|---|
பெயர்கள் | பிளெமியத் தொடுப்பு, எட்டு வடிவத் தொடுப்பு |
வகை | தொடுப்பு வகை |
தொடர்பு | எட்டு வடிவ முடிச்சு |
பொதுப் பயன்பாடு | ஏறுதல் |
ABoK |
|
இது பாதுகாப்பான முடிச்சே ஆயினும் இறுகிச் சிக்கிவிடக்கூடிய தன்மை கொண்டது. இது முறையாகக் கட்டப்பட்டால், இதற்கு எவ்வித தடை முடிச்சுக்களோ, மேலதிக காப்பு முடிச்சுக்களோ தேவைப்படா. எனினும் சில வேளைகளில் கூடிய பாதுகாப்புக்காகத் தடை முடிச்சுக்களும் போடப்படுவது உண்டு.
போடும் முறை
தொகுஒரு கயிற்றின் முனையில் தளர்வான எட்டு வடிவ முடிச்சு ஒன்று இடப்படும். இரண்டாவது கயிறு இப்போது பின்புறமாக முன்னைய முடிச்சு இழைகளுக்கு இணையாக வருமாறு கோக்கப்படும். கயிறுகள் எப்போதும் ஒன்றையொன்று குறுக்கிடாமல் இருக்கும் வகையில் சீர் செய்யப்படும். இதுவே "பிளெமியத் தொடுப்பு"ப் போடும் முறை.
குறிப்புகள்
தொகு