பிளேபோய்
பிளேபோய் வயது வந்தோருக்கான அமெரிக்க இதழாகும். இந்த இதழ் பெண்களை கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும், ஆபாசமாகவும் காட்சிப்படுத்துகின்றது. 1953 இல் ஹூக் ஹெஃப்னர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இது பிளே போய் தொழிலகம் என்னும் நிறுவனமாக தொலைக்காட்சி, இணையம் போன்ற எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலிருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பதிப்புக்கள் வெளிவருகின்றன. பெண்களின் நிர்வாணப் படங்களையும் விளையாட்டு, நுகர்வுப் பொருட்கள் போன்ற பலவித அம்சங்கள் பற்றிய கட்டுரைகளையும் சில வேளைகளில் புனைவு இலக்கியங்களையும் தாங்கி வெளிவருகிறது. சீனா, மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் இவ்விதழுக்குத் தடைவிதித்துள்ளன.
தலைமை | ஹூக் ஹெஃப்னர் |
---|---|
வகை | ஆண்களுக்கான இதழ்கள் |
இடைவெளி | மாதந்தோறும் |
வெளியீட்டாளர் | பிளே போய் தொழிலகம் |
Total circulation (2014) | 800,000[1] |
தொடங்கப்பட்ட ஆண்டு | அக்டோபர் 1, 1953[2] |
முதல் வெளியீடு | டிசம்பர் 1953 |
நாடு | ஐக்கிய அரசு |
மொழி | ஆங்கிலம், பிற மொழிகள் |
வலைத்தளம் | Playboy |
ISSN | 0032-1478 |
2016லிருந்து அட்டையில் கவர்ச்சிப் படங்கள் இடம் பெறாது என பிளேபாய் நிறுவனம் அறிவித்துள்ளது.[3] பிஜி 13 என்ற பதின்மூன்று வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டுமே என்ற அறிவிப்புடன் இதழ்கள் வெளிவந்தன. இணைய வளர்ச்சியின் காரணமாக பிளேபோயின் விற்பனை குறைந்ததுள்ளது.[4]
ஆதாரங்கள்
தொகு- ↑ "Nudes Are Old News at Playboy". The New York Times). 12 October 2015. http://www.nytimes.com/2015/10/13/business/media/nudes-are-old-news-at-playboy.html?hp&action=click&pgtype=Homepage&module=second-column-region®ion=top-news&WT.nav=top-news&_r=0. பார்த்த நாள்: 13 Oct 2015.
- ↑ "Playboy Enterprises, Inc". Playboyenterprises.com. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
- ↑ 'பிளேபாய்' ஆசையை நிறைவேற்றிய பமீலா! நாள் 10 ஜனவரி 2016 - தினமலர் நாளிதழ்
- ↑ "பிளே பாய் இதழில் இனி நிர்வாண படங்கள் இருக்காது - அக்டோபர் 13,2015 தினத்தந்தி நாளிதழ்". Archived from the original on 2015-11-15. பார்க்கப்பட்ட நாள் 2016-06-12.
வெளி இணைப்புகள்
தொகு- Official
- Playboy.com
- Playboy Enterprises Inc. (Corporate website)
- Playboy UK பரணிடப்பட்டது 2012-01-30 at the வந்தவழி இயந்திரம்
- Others
- Playboy Covers of the World—Thousands of Playboy covers from all past and present editions worldwide.
- Crossett, Andrew, "Index: The Women of Playboy – 1967 – 2007", 2007.
- Playmate database at the University of Chicago - archived version June, 2008 பரணிடப்பட்டது 2008-07-17 at the வந்தவழி இயந்திரம்
- A full listing of the Playboy Interview subjects and their interviewers
- Josh Lambert, "My Son, the Pornographer: Jewish Editors at Playboy" பரணிடப்பட்டது 2010-02-27 at the வந்தவழி இயந்திரம்
- Playboy's Chicago history