பிளைத்தின் லாட வெளவால்

பிளைத்தின் லாட வெளவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோலோப்பிடே
பேரினம்:
ரைனோலோபசு
இனம்:
ரை. லெபிடசு
இருசொற் பெயரீடு
ரைனோலோபசு லெபிடசு
பிளைத், 1918
பிளைத்தின் லாட வெளவால் பரம்பல்

பிளைத்தின் லாட வெளவால் (Blyth's horseshoe bat)( ரைனோலோபசு லெபிடசு) என்பது ரைனோலோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வௌவால் சிற்றினம் ஆகும். இது ஆப்கானித்தான் முதல் வியட்நாம் வரை தெற்காசியா முழுவதும் காணப்படுகிறது. இதன் கூரான, பிளவுபட்ட மண்டையோட்டின் மூலம் இந்த சிற்றினத்தை அடையாளம் காணலாம்.

வகைப்பாட்டியல்

தொகு

1844ஆம் ஆண்டில் ஆங்கில விலங்கியல் நிபுணர் எட்வர்ட் பிளைத் என்பவரால் பிளைத்தின் லாட வெளவால் ஒரு புதிய சிற்றினமாக விவரிக்கப்பட்டது. இந்தியாவின் கொல்கத்தா அருகே ஒற்றைமாதிரி சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்று பிளைத் குறிப்பிட்டார்.[2]

விளக்கம்

தொகு

இந்த வெளவாலின் முன் இறக்கையின் நீளம் சுமார் 42 மி.மி. ஆகும்.[3]

உயிரியல் மற்றும் சூழலியல்

தொகு

மலேசியாவின் தியோமன் தீவில் உள்ள பிளைத்தின் லாட வௌவால்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டில் பறந்து வேட்டையாடுவதாக அறியப்படுகிறது. வனப்பகுதியில் வசிக்கும் பறவை வேட்டையாடுபவர்கள் இல்லாததால், இந்த வௌவால்கள் பகலில் இரை தேடுகிறது என்று கருதப்படுகிறது.[4] இது எதிரொலி இருப்பிடத்தை அறிதல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இது இரையினைத் தேடுகிறது. இதன் எதிரொலி சமிக்ஞை அதிர்வெண் சுமார் 91 k ஏர்ட்சு ஆகும்.[3]

வரம்பு மற்றும் வாழ்விடம்

தொகு

பிளைத்தின் லாட வெளவால் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் ஆப்கானித்தான், வங்கதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், பாக்கித்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இது கடல் மட்டத்திற்கு மேல் 0 முதல் 2,338 மீ. உயரமான நிலப்பரப்பில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Srinivasulu, B.; Csorba, G.; Srinivasulu, C. (2019). "Rhinolophus lepidus". IUCN Red List of Threatened Species 2019: e.T19547A21977419. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T19547A21977419.en. https://www.iucnredlist.org/species/19547/21977419. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Blyth, Edward (1844). "Notices of various Mammalia, with descriptions of many new species". The Journal of the Asiatic Society of Bengal 13: 486–487. https://www.biodiversitylibrary.org/page/40057313. 
  3. 3.0 3.1 Shi, Li-min; Feng, Jiang; Liu, Ying; Ye, Gen-Xian; Zhu, Xu (2009). "Is food resource partitioning responsible for deviation of echolocation call frequencies from allometry in Rhinolophus macrotis?". Acta Theriologica 54 (4): 371–382. doi:10.4098/j.at.0001-7051.099.2008. 
  4. Chua, M.A.H.; Aziz, S.A. (2018). "Into the light: atypical diurnal foraging activity of Blyth's horseshoe bat, Rhinolophus lepidus (Chiroptera: Rhinolophidae) on Tioman Island, Malaysia". Mammalia 83: 78–83. doi:10.1515/mammalia-2017-0128. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளைத்தின்_லாட_வெளவால்&oldid=3630512" இலிருந்து மீள்விக்கப்பட்டது