பிள்ளைத்தமிழ் நூற்பட்டி

பிள்ளைத்தமிழ் நூல்கள் தமிழ் மொழியில் பல்கியுள்ளன. இதுவரைத் தெரிய வந்துள்ள, பிள்ளைத்தமிழ் நூல்களின் விவரங்கள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. அவைகளை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம். இதுவரை சைன பௌத்த புலவர்கள் பிள்ளைத் தமிழ் நூல்களைப் பாடி இருப்பதாகப் புலப்படவில்லை. கிறித்தவ, இசுலாமியப் பிள்ளைத்தமிழ் இயற்றப்பட்டுள்ளன. பிள்ளைத் தமிழ்க்குரிய இலக்கணங்களாலும், நூற்களாலும் புலவர்கள் தாம் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள் ஆகியோர் மீது பிள்ளைக் கவிபாடுவர்.

ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள்

தொகு

விநாயகர் மீது பாடப்பட்டவை

தொகு
  1. கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர்
  2. சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ் - கச்சியப்ப முனிவர்
  3. தேசிய விநாயகர் பிள்ளைத்தமிழ் - கணபதி ஆச்சாரி

முருகன் மீது பாடப்பட்டவை

தொகு
  1. சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் - அந்தகக்கவி வீரராகவ முதலியார்
  2. செப்பறைப் பிள்ளைத் தமிழ் - சுப்பிரமணியக் கவிராயர்
  3. க்ஷேத்திரக் கோவைப்பிள்ளைத் தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
  4. திருப்போரூர் முருகன் பிள்ளைத் தமிழ் - திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
  5. திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் - பகழிக்கூத்தர்(இவர் வைஷ்ணவ மதத்தினர்)
  6. திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் - கவிராசபண்டாரம்
  7. திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான்மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  8. திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் - மார்க்கசகாயர்
  9. நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ - அப்புகுட்டி ஐயர்
  10. முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
  11. தணிகைப் பிள்ளைத் தமிழ் - கந்தப்பய்யர்
  12. பழனிப் பிள்ளைத் தமிழ் - தண்டாயுத சுவாமி
  13. திருத்தணிகைச் சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ் - வ. சு. செங்கல்வராயப் பிள்ளை
  14. திருமயி்லைப் பிள்ளைத் தமிழ் - தாண்டவராயர்

திருமால் மீது பாடப்பட்டவை

தொகு
  1. அழகர் பிள்ளைத் தமிழ் - சாமி கவிகாளருத்திர
  2. நவநீத கிருட்டினன் பிள்ளைத் தமிழ் - அண்ணாமலை ரெட்டியார்
  3. வேங்கடேசர் பிள்ளைத் தமிழ் - தெய்வநாயகர்
  4. வைகுந்தநாதன் பிள்ளைத் தமிழ் - வரதராசப் பிள்ளை

சைவ சமயாசாரியர்கள் மீது பாடப்பட்டவை

தொகு
  1. திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் - மாசிலாமணி தேசிகர்
  2. திரு சம்பந்தர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
  3. திரு ஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் - தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை
  4. அப்பர் பிள்ளைத் தமிழ் - மு. கோ. இராமன்
  5. அப்பர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
  6. சுந்தரர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
  7. மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
  • சைவப் புலவர்மீது பாடப்பட்டது
  1. சேக்கிழார் பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • வீர சைவர்மீது பாடப்பட்டது
  1. சிவஞான பாலய்ய சுவாமிகள் பிள்ளைத் தமிழ் - சிவப்பிரகாச சுவாமிகள்
  • ஆதீனகர்த்தர் மீது பாடப்பட்டது
  1. திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

வைணவம் அடியவர் மீது பாடபட்டவை

தொகு
  1. மாறன் பிள்ளைத் தமிழ் - இரத்தினக் கவிராயர்
  2. அநுமார் பிள்ளைத் தமிழ் - அருணாசலக் கவிராயர்
  1. குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர் (அரசன் மீது பாடப்பட்டது )
  2. சிவந்தெழுந்த பல்லவராயன் - பிள்ளைத் தமிழ் (உபகாரி மீது பாடப்பட்டது)
  3. காங்கேயன் பிள்ளைத் தமிழ் - அதிச்சதேவன்
  4. செங்குந்தர்பிள்ளைத் தமிழ் - ஞானப்பிரகாசர்
  5. இராகவர் பிள்ளைத் தமிழ் - குற்றாலக்குழந்தை முதலியார்
  6. மறைமலை அடிகளார் பிள்ளைத் தமிழ் - புதுமைக் கவிஞர் அரங்கசாமி
  1. சாமிநாதன் பிள்ளைத்தமிழ் - சாமிநாதப் பிள்ளை
  1. நபிநாயகம் பிள்ளைத் தமிழ் - செய்யது அனபியாசாகிப்
  2. றசூல் நாயகம் பிள்ளைத் தமிழ் - மீறான் சாகிப் புலவர்
  3. நத்ஹரொலி ஆண்டவர்கள் - பிச்சை இபுராகிம் புலவர் பிள்ளைத் தமிழ்
  4. நபிநாயகம் பிள்ளைத் தமிழ் - பீர்முகமதுப் புலவர்
  5. முகய்யித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் - ஜாவாது புலவர்
  6. முகய்யித்தீன் பிள்ளைத் தமி்ழ் - செய்யிது முகய்தீன் கவிராஜர்
  7. நாகூர்ப் பிள்ளைத் தமிழ் - ஷாஹுல் ஹமீதுப் புலவர்
  8. நாகூர்ப் பிள்ளைத் தமிழ் - ஆரிபு நாவலர்
  9. நாகூர்ப் பிள்ளைத் தமிழ் - பிச்சை இபுராகீம் புலவர்
  10. முகய்யித்தீன் ஆண்டவர் காரணப் பிள்ளைத் தமிழ் - அப்துல் காதிறுப் புலவர்
  11. செய்குதாவூது வீலியுல்லா பிள்ளைத் தமி்ழ் - சொர்ண கவி நாயினா முகம்மது பாவா புலவர்
  12. நபிகள் நாயகம் பிள்ளைத் தமி்ழ் - செய்குமீரான் புலவர்
  13. கோட்டாற்றுப் பி்ள்ளைத் தமிழ் - செய்குதம்பிப் பாவலர்

பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள்

தொகு
  1. மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
  2. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் - சிவஞான முனிவர்
  3. காஞ்சி காமாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
  4. சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ் -  ?
  5. சிவகாமி அம்மை பிள்ளைத் தமிழ - கிருஷ்ணய்யர்
  6. திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ் - முத்துக்குமரன்
  7. மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  8. திருத்தவத்துறைப் பெருந் திருப்பிராட்டியார் பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  9. திருப்பெருமணநல்லூர் திருநீற்று அம்மை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  10. அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  11. திருஉறந்தை காந்திமதி அம்மை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  12. திருவதிகை வீரட்டானப் பெரிய நாயகி பிள்ளைத் தமிழ் - சுப்பிரமணியச் செட்டியார்
  13. திருவருணை உண்ணாமுலை அம்மை பிள்ளைத் தமிழ் - சோணாசல பாரதி
  14. நீலாயதாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - கிருஷ்ணசாமி உபாத்தியாயர்
  15. பாகம்பிரியா அம்மை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  16. மங்கையர்க்கரசியார் பிள்ளைத் தமிழ் - நடேசக் கவுண்டர்
  17. மங்களேஸ்வரி பிள்ளைத் தமிழ் - ?
  18. அளகாபுரி உமை அம்மை பிள்ளைத் தமிழ் - தியாகராயர்
  19. அறம் வளர்த்த நாயகி பிள்ளைத் தமிழ் - தொட்டிக்கலை சுப்பிர மணிய முனிவர்
  20. கோமதி அம்மை பிள்ளைத் தமிழ் - புளியங்குடிப் பிள்ளை
  21. வடிவுடை அம்மன் பிள்ளைத் தமிழ் - வீர வேலாயுத சுவாமி
  22. அபயாம்பிகைப் பிள்ளைத் தமிழ் - ?
  23. கமலாலய அம்மன் பிள்ளைத் தமிழ் -  ?
  24. மயிலம்மை பிள்ளைத் தமிழ் - வைத்தியநாத தேசிகர்
  25. சௌந்தர்ய நாயகி பிள்ளைத்தமிழ் - வீர சுப்பைய சுவாமிகள்
  1. பாத்திமா நாயகி பிள்ளைத் தமிழ் - செய்குமீரான் புலவர்