பி. ஆர். தேவராஜ்

பி. ஆர். தேவராஜ் (இறப்பு 2016 மே 23 ) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநராவார். இவர் கோவை மாவட்டம், புளியமரத்துப்பாளையத்தில் பிறந்தவர். சென்னை கோடம்பாக்கத்தில் வசித்துவந்த இவர் செந்தூரப்பூவே திரைப்படத்தின்வழியாக இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து இளையராகம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார். இவர் ஆந்திர மாநிலம் கர்நூலில் நிகழ்ந்த நேர்ச்சி ஒன்றின் காரணமாக 2016 மே 23 அன்று இறந்தார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "திரைப்பட இயக்குநர் பி. ஆர். தேவராஜ் விபத்தில் மரணம்". தினமணி (2016 மே 24). பார்த்த நாள் 25 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._தேவராஜ்&oldid=2081116" இருந்து மீள்விக்கப்பட்டது