பி. என். இராமச்சந்திர ராவ்

இந்திய திரைப்பட இயக்குநர்

பி. என். இராம்சந்தர் ராவ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார், இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். [1] [2] [3]

பி. என். இராமச்சந்திர ராவ்
பிறப்பு18 ஆகத்து 1955
இந்திய ஒன்றியம், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், சடலவாடா கிராமம்
மற்ற பெயர்கள்பி.என்.ஆர்
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980 - present

இவர் சடலவாடா என்ற கிராமத்தில் பிறந்தவர் என்றாலும், சிறுவயதில் நெல்லூர் மாவட்டம் பல்லப்பள்ளி கிராமத்தில், வாழ்ந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் நோக்குடன் சென்னை வந்தார்,

1973 ஆம் ஆண்டில், சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் திரைப்பட நிறுவனம் நடிப்பு படிப்பு சேர்க்கைக்கான விளம்பரத்தை வெளியிட்டது. வெறும் 18 வயதான பி.என்.ஆர், இதற்காக சென்னைக்குச் சென்றார். ஆனால் குறைந்தபட்ச சேர்க்கை வயது 21 என்பதை பின்னர் உணர்ந்தார். மனச்சோர்வடைந்த பி.என்.ஆர் தனியாக அழுதுகொண்டே திரைப்பட வர்த்தக சபையில் அமர்ந்திருந்தார். இதைக் கண்ட மூத்த திரைப்பட தயாரிப்பாளர் தூண்டி என்பவர் இவருடன் பேசினார். மேலும் பிரபல திரைப்பட இயக்குனரான பி. சந்திரசேகர் ரெட்டியை சந்திக்க அறிவுறுத்தினார், ஏனெனில் அவரும் பி.என்.ஆர். போல நெல்லூரைச் சேர்ந்தவர்

தூண்டியின் ஆலோசனைக்குப் பிறகு பி.என்.ஆர் பி. சந்திரசேகர் ரெட்டியை அணுகி, கிருஷ்ணா எஸ். வி. ரங்கராவ், பாரதி கும்மாடி மற்றும் பலர் நடித்த கொத்த கபுரம் என்ற படத்தில் உதவி இயக்குநராக அவருடன் சேர்ந்தார்.

தொழில் தொகு

பி. என். இராமச்சந்திர ராவ் 1980 ஆம் ஆண்டில் நடிகர் கிரிபாபு தயாரித்த தெலுங்கு திரைப்படமான சந்தியாராகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் கிரிபாபு தயாரிக்க பி. என். ராமச்சந்திர ராவ் இயக்க மேருப்பு தாடி 1983 என்ற மற்றொரு திரைப்படத்தையும் இயக்கினார்.

1987 ஆம் ஆண்டில் பி. என் ராமச்சந்திர ராவ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரிப்பாளராக ஆனார். பின்னர் காந்திநகர் ரெண்டோவ வீதி என்ற படத்தை இயக்கி தயாரித்தார். மேலும் ஆந்திராவில் 200 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடிய சித்ரம் பலரே விசித்திரம் (1991) போன்ற பிற முக்கிய வெற்றிப் படங்களையும் இயக்கி தயாரித்தார். [4] இவர் தற்போது வரை மொத்தம் 12 படங்களைத் தயாரித்துள்ளார்.

குறிப்புகள் தொகு

  1. https://spicyonion.com/person/474481-ramachandra-rao-pn-movies-list/
  2. https://www.youtube.com/watch?v=at-KpvVI7Nw
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-05. பார்க்கப்பட்ட நாள் 2021-06-15.
  4. http://m.rediff.com/movies/1999/jan/25ss.htm

வெளி இணைப்புகள் தொகு