கிருட்டிணா (தெலுங்கு நடிகர்)
கிருட்டிணா (Krishna, 13 மே 1942 – 15 நவம்பர் 2022) என்பவர் தெலுங்கு மொழியைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமாவார். இவரது இயற்பெயர் சிவ ராம கிருட்டிணா கட்டமனேனி என்பதாகும். தெலுங்குத் திறைப்படத்துறையில் பிரத்தியேகமாக தனது படைப்புகளுக்காகப் பெயர் பெற்றவர் எனப் புகழப்படுகிறார்[2]. ஐந்து தசாப்தங்களாக நீடித்த இவரது திரைப்பட வாழ்க்கையில், கிருட்டிணா 350 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்[3].2009 ஆம் ஆண்டில், இந்திய திரைப்படத்துறைக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி கௌவித்தது.[4][5] 1989 இல் காங்கிரசு கட்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக கிருட்டிணா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] 1997 ஆம் ஆண்டில், தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் இவர் பெற்றார். இவரது திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், இவர் சாக்சி போன்ற படங்களில் நடித்தார். இது 1968 இல் தாசுகண்ட் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.[7] 1972 ஆம் ஆண்டில், இவர் பான்டண்டே காபுரம் என்றத் திரைப்படத்தில் நடித்தார். இது அந்த ஆண்டு தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. புராணம், நாடகம், சமூகம், கௌபாய், மேற்கத்திய பாரம்பரியம், நாட்டுப்புறவியல், செயல் மற்றும் வரலாற்று உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இவர் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.[8]
கிருட்டிணா Krishna | |
---|---|
பிறப்பு | சிவ ராம கிருட்டிணா கட்டமனேனி 31 மே 1942 பரிப்பாலெம்,தெனாலி,குண்டூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 15 நவம்பர் 2022 ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா | (அகவை 80)
இருப்பிடம் | ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா |
மற்ற பெயர்கள் | நாட சேக்கருடு, சூப்பர் சிடார் கிருட்டிணா |
பணி | நடிகர்,தயாரிப்பாளர், இயக்குநர், அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | இந்திரா தேவி, விஜய நிர்மலா[1] |
பிள்ளைகள் | மகேஷ் பாபு உள்ளிட்ட 5 குழந்தைகள்) |
திரைப்படங்களில்
தொகுதெலுங்கு திரைப்படத் தொழிலில் முதல் ஈஸ்ட்மன் வண்ணப்படம் - ஈனாடு (1982), முதல் சினிமாஸ்கோப் படம் - அல்லூரி சீதாராம ராஜு (1974), முதல் 70 மிமீ படம் - சிம்காசனம் (1986), முதல் டிடிஎஸ் போன்ற பல தொழில்நுட்ப முதன்மைகளை தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. தெலுங்கு வீர லெவரா (1995) என்றப் படம் கௌபாய் வகையை தெலுங்கு திரையில் அறிமுகப்படுத்துகிறது. இவர் தெலுங்கு உளவு திரைப்படத் தொடர்களான குடாச்சாரி 116 (1966), ஜேம்ஸ் பாண்ட் 777 (1971), முகவர் கோபி (1978), ரகசிய குடாச்சாரி (1981) மற்றும் குடாச்சாரி 117 (1989) போன்றப் படங்களில் நடித்த்துள்ளார். கிருட்டிணா இயக்கிய சங்காரவம் (1987), முகுரு கொடுக்குலு (1988), கொடுக்கு தீதினா கபுரம் (1989), பாலா சந்திரடு (1990) மற்றும் அண்ணா தம்முடு (1990) ஆகிய படங்களில் தனது மகன் மகேஷ் பாபுவை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்தார் . கிருட்டிணா 17 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் இவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான பத்மாலயா பிலிம் ஸ்டுடியோவின் கீழ் பல்வேறு படங்களையும் தயாரித்துள்ளார்.
இயக்குநர்களுடன்
தொகுகிருட்டிணா, அந்த காலத்தின் பல இயக்குனர்களான ஆதூர்த்தி சுப்பாராவ், வி. மதுசூதன ராவ், கே விஸ்வநாத், பாபு, தாசரி நாராயண ராவ் மற்றும் கே ராகவேந்திர ராவ் ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜயநிர்மலாவுடன் 48 க்கும் மேற்பட்ட படங்களிலும், ஜெயபிரதாவுடன் 47 படங்களிலும் இணையாக நடித்த சாதனையும் இவருக்கு உண்டு.[3] திசம்பர் 2012 இல், தனது 69 வயதில், கிருட்டிணா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[9] இவர் 25 திரைப்படங்களில் இரட்டை வேடங்களிலும், 7 திரைப்படங்களில் மூன்று வேடங்களிலும் நடித்துள்ளார்.
சொந்த வாழ்க்கை
தொகுகிருட்டிணா 1944 மே 31 அன்று ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், தெனாலி, புர்ரிபாலத்தில் கட்டமநேனி இராகவையா சவுத்ரி மற்றும் கட்டமநேனி நாகரத்னம்மா ஆகியோருக்கு பிறந்தார்.
இறப்பு
தொகுஇதய செயலிழப்பு காரணமாக 2022 நவம்பர் 15 அன்று இறந்தார்.[10][11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bestowed with bliss". The Hindu. Chennai. 4 Aug 2007. Archived from the original on 3 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 4 Jan 2012.
- ↑ "Superstar Krishna bids goodbye to films & politics". 123 Telugu. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.
- ↑ 3.0 3.1 "Krishna retires from acting, politics". sify.com. Archived from the original on 28 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ . 26 Jan 2009.
- ↑ "Australian stamp in honour of Krishna - Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
- ↑ "Actor Krishna to campaign for Congress - Sify.com". sify.com. Archived from the original on 29 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Archive News". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
- ↑ andhraheadlines. "Andhraheadlines: Breaking News, Latest Andhra News, Telangana News, Politics, Entertainment, Sports, World, Video News". www.andhraheadlines.com. Archived from the original on 1 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Super Star Krishna retires from movies". http://timesofindia.indiatimes.com/entertainment/regional/telugu/news-interviews/Super-Star-Krishna-retires-from-movies/articleshow/17759654.cms. பார்த்த நாள்: 25 December 2012.
- ↑ Gabbeta Ranjith Kumar (15 November 2022). "Krishna: An icon whose contribution to Telugu cinema is unparalled". Indian Express.
- ↑ "Veteran Telugu actor Krishna passes away". தி இந்து. 15 November 2022.