பி. எஸ். கிருஷ்ணன்

பி. எஸ். கிருஷ்ணன் , (30 திசம்பர் 1932 - 10 நவம்பர் 2019) , 1956 ஆண்டு பணியில் சேர்ந்த ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார் .1989 இல் வி. பி. சிங் தலைமையிலான அரசாங்கத்தில் சமூக நல அமைச்சகத்தின் செயலாளராக இருந்து மண்டல் ஆணைய அறிக்கையை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்.

பி. எஸ். கிருஷ்ணன்
பிறப்பு30 திசம்பர் 1932 ,[1]
இறப்பு10 நவம்பர் 2019
தில்லி
பணிஐ.ஏ.எஸ்
அறியப்படுவதுசமூக நீதி


பணிகள் தொகு

  • 1956-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஆந்திர மாநிலத்தில் பணிப்பொறுப்பு கொடுக்கப்பட்டார் .அங்கு கிராமப்புறத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கு தீர்வாக நிலச்சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தாக்கத்தின் வழி செயல்பட்டார்.
  • இந்தியாவிலேயே முதன்முறையாக முஸ்லிம் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டிற்கான திட்டத்தை ஆந்திரப் பிரதேசத்தில் அறிமுகம் செய்து எண்ணற்ற எதிர்ப்புகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் சென்று அதைச் சட்டப்பூர்வமாக்கியவர்.

நூல்கள் தொகு

  • சாதி ஒழிப்பிற்கான சென்னை பிரகடனம்
  • A Crusade for Social justice -Bending Governence Towards The Deprived- P.S.Krishnan (ஆங்கிலம்)
  • “சமூக நீதிக்கான அறப்போர் – பி.எஸ். கிருஷ்ணன்: நலிந்தோர் நலனுக்கான ஓர் வாழ்வின் அர்ப்பணம்" - முனைவர் வசந்திதேவியின் 50 கேள்விகளுக்கு அவரது பதிலாக அமைந்த அவரது வாழ்க்கைப் பயண நூல்.[3]
  • Social Exclusion and Justice in India [4]
  • பிரண்ட்லைன்[5] மற்றும் எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி ஆய்விதழ்களில் [6] கட்டுரைகள் எழுதியுள்ளார்


மேற்கோள்கள் தொகு

  1. "SUPREMO". supremo.nic.in.
  2. "P S Krishnan, bureaucrat behind landmark social justice legislation, dies". 11 November 2019.
  3. देवी, Vasanthi Devi वासंती (30 August 2018). "P.S. Krishnan: A bureaucrat committed to social justice". Forward Press.
  4. Krishnan, P. S. (28 March 2019). "Social Exclusion and Justice in India". Taylor & Francis Limited – via Google Books.
  5. "P S Krishnan". Frontline.
  6. "P S Krishnan". Economic and Political Weekly. 5 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._கிருஷ்ணன்&oldid=2848364" இலிருந்து மீள்விக்கப்பட்டது