பி. கே. நாராயணன் நம்பியார்

கேரள இசைக்கலைஞர்

பானிவடத்திலகன் பி. கே. நாராயணன் நம்பியார் (Paanivadathilakan P. K. Narayanan Nambiar) இவர் ஒரு இந்திய இசைக்கலைஞர், மிழாவு என்ற ஒரு பாரம்பரிய தாள வாத்தியம் இசைக்கருவியிலும், கூடியாட்டக் கலையில் இவரது கலை நுணுக்கத் திறமைக்கும் பெயர் பெற்றவர். இவர் கூடியாட்டத்தின் நிபுணர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 2008 ஆம் ஆண்டில், கலைக்கு இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.[1]

பி. கே. நாராயணன் நம்பியார்
பிறப்புலக்கிடி
பணிPercussionist

வாழ்க்கை

தொகு

பி. கே. நாராயணன் நம்பியார், கேரளாவின் புகழ்பெற்ற கூடியாட்ட மேதையான மணி மாதவ சாக்கியர் மற்றும் 1927 ஆம் ஆண்டில் அறியப்பட்ட நங்கியர் கூத்து கலைஞரான கோச்சம்பில்லி குஞ்சிமாலு நங்கியரம்மா போன்றோரின் ஊரான பாலக்காட்டில் உள்ள கில்லிகுரிசிமங்கலத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை தனது தந்தையின் உதவியுடன் கில்லிக்குரிசிமங்கலத்தில் குருகுலம் முறையில் படித்தார். பின்னர் கோச்சம்பில்லி இராமன் நம்பியார் மற்றும் மேலதத் கோவிந்தன் நம்பியாரிடமிருந்தும் கூடியாட்டம் கற்கத் தொடங்கினார்.[2] பின்னர் மிழாவு இசைக்கும் கலையிலிலும் தேர்ச்சிப் பெற்றார்.

நம்பியாரின் அறிமுகமானது 1948 ஆம் ஆண்டில் 21 வயதில் மலப்புறத்தில் உள்ள கோட்டக்கல் கோவிலகம் சிவன் கோவிலில் தொடங்கியது. கூடியாட்ட நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1954 இல் இலக்கிடி குஞ்சன் நினைவு நூலகத்தில் சுப்ரதானஞ்சயத்தில் அருச்சுனனாக நடித்தார். இது முதல் முறையாக கூட்டியாட்டத்தின் கலை ஒரு கோவிலின் நான்கு சுவர்களுக்கு வெளியே நிகழ்த்தப்பட்டது. நம்பியார், சாக்கியர் சமூகத்திற்கு வெளியில் இருந்து வந்த ஒருவராவார். 1966 ஆம் ஆண்டில், கேரள கலாமண்டலத்தில், மிழாவுவின் குருவாக சேர்ந்தார். அறியப்பட்ட மிழாவு கலைஞர்களான ஈஸ்வரன் உன்னி, வி.கே.கே. அரிகரன் மற்றும் எடநாடு உன்னிகிருட்டிணன் நம்பியார் ஆகியோர் கலாமண்டலத்தில் இவரது மாணவர்கள் ஆவர். [3]

நம்பியார் தனது சிறுவயது நாட்களில் ஒரு நடிகரான சாந்தா நங்கியராம்மாவை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அறியப்பட்ட கலைஞர்கள் ஆவர். இவரது மகள் வசந்தி நாராயணன் கூடியாட்டம் மற்றும் நங்கியர்கூத்து ஆகிய இரண்டின் நிபுணராக உள்ளார். மேலும் குருகுலத்தின் உறுப்பினராகவும் செயல்படுகிறார். இரண்டாவது மகள் முனைவர் பி. கே. ஜெயந்தி சமசுகிருத பல்கலைக்கழகத்தில் கூடியாட்டத்தில் பணியாற்றும் நிபுணத்துவம் பெற்ற சமசுகிருத அறிஞர் ஆவார். மகன்கள், உன்னிகிருட்டிணன் நம்பியார் மற்றும் ஹரிஷ் நம்பியார் இருவரும் நன்கு அறியப்பட்ட மிழாவு, கூத்து மற்றும் பதகம் கலைஞர்கள் ஆவார்கள். உண்மையில் ஹரிஷ் சிக்கலான மந்திரக்கத்தை நிகழ்த்திய ஒரே சாக்கியர் அல்லாத முதல் கலைஞராவார்.[3]

ஆளுமை

தொகு
 
மிழாவு

1988 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை தான் பணியாற்றிய கலாமண்டலத்தில் மிழாவு மீது முறையான பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் நாராயணன் நம்பியார். மிழாவு தயாம்பகா என்ற மற்றொரு தாள கருவியில் மிழாவு மற்றும் இடக்கை சம்பந்தப்பட்ட ஜுகல்பந்தியின் தனித்துவமான வடிவத்தை அவர் உருவாக்கினார். கூடியாட்டத்தின் பெண் அம்சமான நங்கியர் கூத்துவை புத்துயிர் பெறுவதில் இவர் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளுக்காகவும் அவர் பாராட்டப்படுகிறார். இது ஒரு பெண் தனி நடிப்பாகும். [4]

கூடியாட்டத்தின் அரங்கம் போன்ற பல அட்டப்பிரகாரங்களை (மேடை கையேடுகள்) நம்பியார் எழுதியுள்ளார். அதாவது காளியாங்கத்தின் அரங்கம், இதன் செயல்திறன் கையேடு 400 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. இவர் ஹல்லிசகம் என்ற நாடகத்தில் ஒரு புதிய நடன வடிவத்தையும் தொடங்கினார். 400 ஆண்டு பழமையான கூடியாட்ட நாடகமான மத்தவிலசோம் பிரகாசனத்தின் மறுவேலை செய்யப்பட்ட பதிப்பின் வடிவத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் குறிப்பிடப்படுகிறார். இது ஒரு புதிய பாணி விளக்கக்காட்சியை வழங்குவதற்காக மீண்டும் கட்டமைக்கப்பட்டு நடனமாடப்பட்டது.

நம்பியார் தற்போது பத்மசிறீ மாதவ சாக்கியர் குருகுலம் என்ற கலைப் பள்ளியை நடத்தி வருகிறார். இது லலித் கலா அகாதமிமியால் கூடியாட்டத்திற்கான கற்றல் இடமாகக் கருதப்படுகிறது.[5]

விருதுகள்

தொகு

நாராயணன் நம்பியார் 30 க்கும் மேற்பட்ட கருத்தரங்கு கட்டுரைகள் உள்ளிட்ட கட்டுரைகள் மூலம் கூடியாட்டத்தின் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்துள்ளார். மேலும் சமசுகிருதத்தில் அறியப்படாத 25 கையெழுத்துப் பிரதிகளையும் கண்டுபிடித்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. Prem Manasvi. "Mizhavu Guru P.K. Narayanan Nambiar". mykerala.net. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 3.2 "Masterly movements and strokes - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
  4. "Guru Panivada Tilaka P. K. Narayanan Nambiar - a Mizhavu maestro | Kerala Tourism". keralatourism.org. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
  5. "index-3". kutiyattam.com. Archived from the original on 28 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
  6. "Nritha-Natya Puraskaram for Narayanan Nambiar- The New Indian Express". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
  7. "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.