பி. கே. வாரியர்

ஆயுர்வேத மருத்துவர்

பி. கே. வாரியர் (P. K. Warrier) என்று பிரபலமாக அறியப்பட்ட பன்னியம்பள்ளி கிருஷ்ணான்குட்டி வாரியர் (பிறப்பு 5 ஜூன் 1921) என்பவர் ஒரு இந்திய ஆயுர்வேத மருத்துவர் ஆவார். இவர் இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் மலப்புறம் மாவட்டம் கோட்டக்கல்லில் பிறந்தவர். [1] இவர் கோட்டக்கல் ஆர்யா வைத்ய சாலையின் தலைமை மருத்துவரும், நிர்வாக அறங்காவலரும் ஆவார். [2] இவர் ஆர்யா வைத்ய சாலையின் நிறுவனரான வைத்தியரத்னம் பி. எஸ். வாரியரின் இளைய மருமகன் ஆவார்.

பன்னியம்பள்ளி கிருஷ்ணான்குட்டி வாரியர்
தொழில் ஆயுர்வேத மருத்துவர்
நாடு இநிதியர்
எழுதிய காலம் 20ஆம் நூற்றாண்டு
கையொப்பம் Dr. P. K. Warrier.jpg

விருதுகளும் கௌரவங்களும்தொகு

1999 ஆம் ஆண்டில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தால் இவருக்கு கெளரவ டி.லிட் பட்டம் வழங்கப்பட்டது. [3] பி. கே. வாரியருக்கு அப்போதைய மகாராட்டிரா ஆளுநர் பி. சி. அலெக்சாண்டர் 30 வது தன்வந்த்ரி விருதை வழங்கினார். [4] ஆயுர்வேதத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளை பாராட்டும்விதமாக இவருக்கு 1999 இல் பத்மசிறீ விருதும், [5] 2010 இல் [5] பத்ம பூசண் விருதையும் இந்திய அரசிடமிருந்து பெற்றார். [6] [7]

வெளி இணைப்புகள்தொகு

குறிப்புகள்தொகு

  1. GG Gangadharan. "Padmashri P. K. Warrier, Arya Vaidya Sala, Kottakkal".
  2. "Archived copy". மூல முகவரியிலிருந்து 15 November 2010 அன்று பரணிடப்பட்டது.
  3. "Calicut University honorary degree recipients". University of Calicut. மூல முகவரியிலிருந்து 7 November 2013 அன்று பரணிடப்பட்டது.
  4. "30th Dhanvantari Award conferred to Dr. P. K. Warrier".
  5. 5.0 5.1 "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது.
  6. Padma Bhushan Awardees
  7. "AMMOI felicitates Dr P K Warrier, E T Narayanan Mooss in Thrissur".
  8. "Award ceremony".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._வாரியர்&oldid=2977589" இருந்து மீள்விக்கப்பட்டது