பி. சங்கராநந்து

இந்திய அரசியல்வாதி

பி. சங்கராநந்து (B. Shankaranand) இந்திய அரசாங்கத்தில் ஓர் அமைச்சராகவும், கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரசு தலைவராகவும் இருந்தார்.

பி. சங்கராநந்து
B. Shankaranand
பாராளுமன்றம்
பதவியில்
7 அடுத்தடுத்த தேர்தல்
முன்னையவர்வி.எல். பாட்டில்
பின்னவர்ராட்னமாலா சாவனூர்
தொகுதிசிக்கோடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 அக்டோபர் 1925[1]
கனகாலி,சிக்கோட்டி, பெல்காம், கருநாடகம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு20 நவம்பர் 2009(2009-11-20) (அகவை 84)
பெல்காம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கமலா தேவி
பிள்ளைகள்2 மகன்கள், 6 மகள்கள்

மத்திய அமைச்சரவையில் சங்கராநந்து பின்வரும் பொறுப்புகள் வகித்துள்ளார்.

பதவி தேதிகள்
நாடாளுமன்ற விவகாரங்களின் துணை அமைச்சர். 16 மார்ச்சு 1971 முதல் 24 மார்ச்சு 1977
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர். 16 சனவரி 1980 முதல் 31 டிசம்பர் 1984
நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் 31 டிசம்பர் 1984 முதல் 25 செப்டம்பர் 1985
நீர்வளத்துறை அமைச்சர் 25 செப்டம்பர் 1985 முதல் 21 August 1987
25 சூன் 1988 முதல் 2 டிசம்பர் 1989
சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர். 25 சூன் 1988 முதல் 2 டிசம்பர் 1989
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர். 21 சூன் 1991 முதல் 17 சனவரி 1993
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர். 18 சனவரி 1993 முதல் 22 டிசம்பர் 1994

பிரதம மந்திரிகளான இந்திரா காந்தி, இராசீவ் காந்தி மற்றும் நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவைகளில் சங்கராநந்து பணியாற்றியுள்ளார். ஏப்ரல் 26, 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 அன்று போபர்சு ஒப்பந்தம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட முதல் கூட்டு நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்தார். [2] 1967 முதல் 1996 வரை 29 ஆண்டுகளாக சிக்கோடியை மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், தனது அரசியல் வாழ்க்கையில் ஒரே இடத்திலிருந்து தொடர்ச்சியாக 7 முறை வென்று சாதனை படைத்துள்ளார். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. web master. "Tenth Lok sabha Members Bioprofile". PARLIAMENT OF INDIA LOK SABHA HOUSE OF THE PEOPLE. National Informatics Centre (NIC). பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
  2. Former Union Minister B Shankaranand passes away | NetIndian
  3. http://kannada.oneindia.in/news/karnataka/lok-sabha-election-2014-chikkodi-ls-constituency-profile-lse-082802.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சங்கராநந்து&oldid=3158858" இலிருந்து மீள்விக்கப்பட்டது