பி. சி. கோகிலா

பி. சி. கோகிலா (P. C. Kokila) இந்தியாவினைச் சார்ந்த இந்திப் பேராசிரியர் ஆவார். இவர் திருக்குறளைக் குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்ததினால் மிகவும் பிரபலமானவர் ஆவார்.[1][2]

பி. சி. கோகிலா
கோகிலாவால் குசராத்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளினை பிரதமர் நரேந்திர மோதி வெளிடும் காட்சி (2015ல்)
பிறப்புபவநகர், குசராத்து, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிபேராசிரியர்
அறியப்படுவதுதிருக்குறள் மொழிபெயர்ப்பு

சுயசரிதை

தொகு

பி. சி. கோகிலா குசராத்தில் உள்ள பவநகரில் பிறந்தார். 1981ஆம் ஆண்டில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1984ஆம் ஆண்டில் தென்னிந்திய இந்தி பிரச்சார சபையிலிருந்து இந்தியில் எம்.ஏ. முடித்தார். பின்னர் 1986இல் ஆய்வியல் நிறைஞர் மற்றும் 1994இல் முனைவர் பட்டம் பெற்றார். 1998ஆம் ஆண்டில், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் மதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். இவர் 1986ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் இந்தி கற்பித்தல் திட்டத்தில் இந்தி பிரத்யபிகாவாக (பண்டிதர்) தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1988 முதல், சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இந்தி துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் இணைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் உள்ளார். இவர் 24 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார், அவற்றில் 16 வெளியிடப்பட்டுள்ளன.[3]

திருக்குறளின் பண்டைய தமிழ்ப் பதிப்பினை கோகிலா குசராத்து மொழியில் மொழிபெயர்த்தார். இது 2015ஆம் ஆண்டில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது. இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார்.[1][2] குஜராத்தியில் 1931ஆம் ஆண்டில் நஜுக்லால் சோக்ஸி மற்றும் 1971 இல் காந்திலால்[4] ஆகியோரைத்தொடர்ந்து குஜராத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

மேலும் காண்க

தொகு
  • திருப்புரல் மொழிபெயர்ப்புகள்
  • குஜராத்தியில் திருக்குரல் மொழிபெயர்ப்பு
  • மொழிபெயர்ப்பாளர்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "PM releases Gujarati translation of Thirukkural, on 'Thiruvalluvar Day'". Business Standard (Delhi). 16 January 2015. http://www.business-standard.com/article/government-press-release/pm-releases-gujarati-translation-of-thirukkural-on-thiruvalluvarday-115011601100_1.html. 
  2. 2.0 2.1 "Under the spell of the Kural". The Hindu (Chennai). 20 November 2014. http://www.thehindu.com/features/friday-review/tirukkural-translations/article6618091.ece. 
  3. Tirukkural in Gujarati (in தமிழ் and குஜராத்தி) (1 ed.). Chennai: Central Institute of Classical Tamil. 2015. p. 428. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81-74419-2.
  4. Sanjeevi (Ed.), N. (1973). First All India Tirukkural Seminar Papers (2 ed.). Chennai: University of Madras. p. 13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சி._கோகிலா&oldid=3139599" இலிருந்து மீள்விக்கப்பட்டது