பி. பிரபா
பி பிரபா (B. Prabha;1933-2001) [1] முதன்மையாக நெய்யோவியத்தில் பணியாற்றிய ஒரு சிறந்த இந்தியக் கலைஞர் ஆவார். சிந்திக்கும் கிராமப்புறப் பெண்களின் அழகான நீளமான உருவங்களின் சித்தரிப்புகளுக்கு இவர் மிகவும் பிரபலமானவர். ஒவ்வொன்றும் ஒரே நிறத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர் இறக்கும் போது, இவரது படைப்புகள் 50இக்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் காட்டப்பட்டன. மேலும் இந்தியாவின் நவீன கலைக் கலைக்கூடம் உட்பட முக்கியமான தொகுப்புகளிடம் இடம் பெற்றது .[2]
பி. பிரபா | |
---|---|
பிறப்பு | 1933 மகாராட்டிரம், இந்தியா |
இறப்பு | 2001 (அகவை 67–68) நாக்பூர், இந்தியா |
தேசியம் | இந்தியா |
கல்வி | சர் ஜேஜே கலைக்கல்லூரி |
அறியப்படுவது | ஓவியக் கலை |
வாழ்க்கைத் துணை | பி. விட்டல் (தி. 1956–1992) |
இந்தியாவில் சில பெண் கலைஞர்களே இருந்த நேரத்தில் பிரபா வேலை செய்யத் தொடங்கினார். நவீனத்துவவாதியான அம்ரிதா சேர்கிலின் ஓவியங்களால் இவர் ஆழமாக ஈர்க்கப்பட்டார். சேர்கிலைப் போலவே, இவரது படைப்புகளிலும் கதாநாயகர்கள் பொதுவாக பெண்களே. கிராமப்புற பெண்களின் அவலநிலையால் இவர் பாதிக்கப்பட்டார். இது காலப்போக்கில், இவருடைய பணியின் முக்கிய கருப்பொருளாக மாறியது. யங்பஸ் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், "மகிழ்ச்சியான ஒரு பெண்ணை நான் இன்னும் பார்க்கவில்லை" என்று கூறினார். [3] இவரது ஓவியங்கள் நிலப்பரப்புகள் முதல் வறட்சி, பசி மற்றும் வீடற்ற தன்மை போன்ற சமூக பிரச்சினைகள் வரை பரந்த பாடங்களை உள்ளடக்கியது. [4]
இவர் நாக்பூர் கலைப்பள்ளியில் படித்தார், [1] மும்பைக்குச் செல்வதற்கு முன், இவர் சர் ஜேஜே கலைப்பள்ளியில் பயின்றார். சர் ஜேஜே கலைப் பள்ளியில் இவர் தனது கணவரும், கலைஞரும், சிற்யுமான பி. விட்டலைச் சந்தித்தார். [5]
தொழில்
தொகுபிரபா வளர்ந்துவரும் கலைஞராக இருந்தபோது, இவரது படைப்புகளை ஏர் இந்தியா வாங்கியது. இவரது ஓவியங்கள் பட்டியலில் பயன்படுத்தப்பட்டு இலண்டனில் உள்ள ஏர் இந்தியா பயணச்சீட்டு அலுவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. மக்புல் ஃபிதா உசைன்மற்றும் வாசுதேவ் எஸ்.கெய்டொண்டே போன்ற இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர்களின் ஏர் இந்தியாவின் விரிவான சேகரிப்பின் அடிப்படையில் இவரது பணி அமைந்தது. [6]
இவரது ஆரம்ப ஆண்டுகளில், பிரபா இசை மற்றும் கலை இரண்டிலும் ஆர்வம் காட்டினார். தன் சகோதரரின் ஆலோசனையைப் பெற்று, தன் மெட்ரிகுலேசனை முடிக்கும் போது, கலைத் தொழிலைத் தேர்வு செய்ய முடிவு செய்தார். இவரது ஆரம்பகால வேலை நவீன ஓவியமாக இருந்தது.. காலப்போக்கில் இவர் தனி முத்திரையைப் பதித்தார். [7]
பிரபாவின் கையெழுத்து பாணி 1956 ஆம் ஆண்டில் சக கலைஞர் பி. விட்டலுடனான திருமணத்திற்குப் பிறகு முழுமையாக உருவானது. அதே ஆண்டு கணவருடன் தனது முதல் கூட்டு கண்காட்சியை நடத்தினார். பெண்கள் ஆர்வமின்றி ஒடுக்கப்பட்ட காலத்தில் இவர் ஒரு பெண் கலைஞராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[8] இவர் பிரபலமாக கூறியது போல், "பெண்களின் அதிர்ச்சி மற்றும் சோகத்தை வரைவதே எனது நோக்கம்." [9]
கண்காட்சிகள்
தொகுஇவர் தனது முதல் கண்காட்சியை 1956ஆம் ஆண்டில் தனது கணவர் பி. விட்டலுடன் நடத்தினார். பல ஆண்டுகளாகஇவர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 50க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தினார். [10]
இவர் 1959 மற்றும் 1961இல் தில்லியின் குமார் கலைக்கூடத்தில் இரண்டு தனி நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது கண்காட்சி "சிரத்தாஞ்சை" இவரது மறைந்த கணவர் பி. விட்டலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது 1993 இல் மும்பையில் நடைபெற்றது. பிரபாவின் படைப்புகள் 1996 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஜஹாங்கீர் கலைக்கூடத்தில் நடந்த 'தற்கால இந்திய ஓவியர்கள்' குழு கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர் 1958 இல் மும்பை கலைக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இருந்தார். அங்கு இவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "A peep into artist B. Prabha's oeuvre and her inspirations". The Arts Trust Online Magazine. Archived from the original on 22 October 2017. பார்க்கப்பட்ட நாள் 21 October 2017.
- ↑ "B. Prabha: Abstract Figure painter". Tutt'Art. பார்க்கப்பட்ட நாள் 21 October 2017.
- ↑ "Youngbuzz India's Premier Career Guidance Company". Archived from the original on 2006-09-13. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
- ↑ "B Prabha". Saffronart. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
- ↑ "B Prabha". Saffronart. பார்க்கப்பட்ட நாள் 21 October 2017.
- ↑ Thomas, Maria. "The fascinating story behind Air India's priceless collection of art". Quartz India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-03.
- ↑ "A peep into artist B. Prabha's oeuvre and her inspirations". www.theartstrust.com. Archived from the original on 22 October 2017. பார்க்கப்பட்ட நாள் 21 October 2017.
- ↑ "B Prabha". Saffronart. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
- ↑ "B. Prabha". Christie's.
- ↑ "B. Prabha - Christies". artist.christies.com.
- ↑ "B Prabha". Saffronart. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.