பி. வி. பரபிரம்ம சாஸ்திரி

பி.வி.பரபிரம்ம சாஸ்திரி [1] (1920-2016) ஐக்கிய ஆந்திரப் பிரதேச அரசின் தொல்லியல் துறையின் துணை இயக்குநராகப் பதவி வகித்த ஒரு தொல்லியல் ஆய்வாளர், வரலாற்றாசிரியர், கல்வெட்டு வல்லுநர் மற்றும் நாணயவியல் வல்லுநர் ஆவார்.

தொடக்ககால வாழ்க்கை

தொகு

சாஸ்திரி குண்டூர் மாவட்டத்தில் உள்ள பெத்த கொண்டூர் (Pedda Konduru) கிராமத்தில் 1921 ஆம் ஆண்டு பிறந்தார்.[2] அவருடைய முன்னோர்கள் ஐதராபாத்தில் குடியேறியவர்கள். 

வரலாற்று ஆய்வாளர்

தொகு

தெலுங்கு மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை மிக்கவரும், கல்வெட்டு ஆய்வாளருமான இவர் காகதீய வம்சத்தின் வரலாற்றை (History of Kakatiya Dynasty) மீண்டும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்தார்.[2]

சாதனைகள்

தொகு

சாஸ்திரி இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய சக ஆய்வாளர் நிலைக்கு (National Fellowship to Indian History Research Council) [3] தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் தேசிய சக ஆய்வாளர் நிலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் சாஸ்திரியும் ஒருவர். இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் என்பது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள முதன்மையான வரலாற்று ஆராய்ச்சி அமைப்பாகும்.

தொல்லியல், கல்வெட்டு ஆய்வுகள்

தொகு

இவர் 1981 வரை தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையில் துணை இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றார்.[2] கல்வெட்டு ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட இவர் தெலுங்கானா வில் பல கல்வெட்டு ஆய்வுகளை நடத்தியுள்ளார்.[4]

அவர் நடத்திய சாதவாகன வம்சத்தின் தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியின் அடிப்படையில், கௌதமிபுத்ரா சதகரணி திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வுகளில், தெலுங்கு வரலாற்று ஆராய்ச்சிக்கான அவரது பங்களிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.[5][6][7][8]

படைப்புகள்

தொகு

சாஸ்திரி வரலாற்று மற்றும் தொல்லியல் துறையில் பல படைப்புகளை பிற வரலாற்றாசிரியர்களுடன் இணைந்து எழுதியுள்ளார். பின்வருவன இவரது படைப்புகளாகும்:

  • Epigraphia Andhrica[9]
  • Rural Studies in Early Andhra[10][11] in which he traced the historical origins of the Kamma caste.
  • Unknown Coins
  • Researches In Archaeology, History & Culture In The New Millennium - Dr. P.V. Parabrahma Sastry Felicitation Volume[12]
  • Telugu lipi, āvirbhāva vikāsālu[13]
  • Kākatīya caritra
  • Kākatīya coins and measures
  • Inscriptions of Andhra Pradesh : Karimnagar District
  • The Kākatiyas of Warangal
  • Select epigraphs of Andhra Pradesh
  • Siddhōdvāha of Nr̥isiṁha

இறப்பு மற்றும் மரபுரிமைப் பேறு

தொகு

சாஸ்திரி தனது 96வது வயதில் 27 ஜூலை 2016 அன்று நீண்டகால நோய் காரணமாக காலமானார்.[14] இவருக்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "1-The Age of Iron in South Asia". http://article.tebyan.net/26210/1-The-Age-of-Iron-in-South-Asia-. 
  2. 2.0 2.1 2.2 Eminent historian Parabrahma Sastry passes away. The Hans India 29 July 2016
  3. "National Fellowship for Dr P Parabrahma Sastry of Hyderabad". தி டெக்கன் குரோனிக்கள். 2015-10-03. http://www.deccanchronicle.com/151003/nation-current-affairs/article/national-fellowship-dr-p-parabrahma-sastry-hyderabad. 
  4. Epigraphical Allusion to sur~ery in Ayurveda P. V. Parabrahma Sastry Bulletin Ind. Inst, Hist. Med. Vol. VII. ப.127
  5. "Balakrishna shares Satakarni secrets". Myfirstshow.com. 2017-01-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
  6. Shastri, Ajay Mitra (1999). The Age of the Satavahanas: Great Ages of Indian History, 2 Vols von Ajay Mitra Shastri: Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173051593. பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
  7. Durga Prasad. "History of the Andhras" (PDF). Katragadda.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
  8. "1-The Age of Iron in South Asia". Article.tebyan.net. பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
  9. Mohammad Abdul Waheed Khan, N. Venkata Ramanayya, P.V. Parabrahma Sastry (1975). Epigraphia Āndhrica. பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  10. Sastry, P.V. Parabrahma (1996-01-01). Rural Studies in Early Andhra (in ஆங்கிலம்). V.R. Publication.
  11. P.V. Parabrahma Sastry (2009-07-21). Rural Studies in Early Andhra. பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
  12. "Parabrahma Sastry, P.V. (1922–) - People and organisations". Trove. பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
  13. OpenLibrary.org. "P. V. Parabrahma Sastry". Open Library. பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
  14. "Archaeologist P.V. Parabrahma Sastry Death". Telangananewspaper.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._பரபிரம்ம_சாஸ்திரி&oldid=3742675" இலிருந்து மீள்விக்கப்பட்டது