பீடித் தொழில் (தமிழ்நாடு)
தமிழகத்தின் பல தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் பீடித் தொழில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 75 பெரிய பீடி உற்பத்தி நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 50,00,000 மேற்பட்ட பீடிகள் உற்பத்தி செய்கிறது. மேலும் 500 சிறு பீடி உற்பத்தி நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 50,000 முதல் 5 இலட்சம் வரையிலான பீடிகள் உற்பத்தி செய்கின்றனர். நாளொன்றுக்கு 50 கோடி பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. 1,000 பீடியின் மதிப்பு 250 ரூபாய் ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 4,000 கோடி பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.[1] இப்பீடித் தொழிலில் அமைப்பு சாரா 5 இலட்சம் பேர் வேலை செய்கின்றனர். பீடித்தொழிலாளர்களில் 90% பெண்கள் ஆவார்.[2]
மூலப்பொருட்கள்
தொகுபீடித்தொழிலுக்குரிய மூலப்பொருளான தெண்டு இலைகள் ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் மலைக்காடுகளிலிருந்து பெறப்படுகிறது. மேலும் புகையிலையை மகாராட்டிரா, குஜராத், போன்ற மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் தாராபுரம் பகுதிகளிலிருந்தும் பெறப்படுகிறது.
கூலி
தொகுகுறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி 1,000 பீடிகள் தயாரிக்கும் தொழிலாளியின் கூலி ரூபாய் 196/- ஆகும். ஆனால் சட்டப்படியான கூலியைவிட குறைந்த கூலியே பீடித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 8 முதல் 12 வரை பீடிசுற்றும் முழுநேர தொழிலாளி 800 முதல் 1200 பீடிகளைச் சுற்றுவர். பகுதிநேரமாக பீடிச்சுற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நாளொன்றுக்கு 300 முதல் 500 பீடிகளைச் சுற்றுவர்.[3]
பீடி சுற்றும் தொழிலிடங்கள்
தொகுதமிழ்நாட்டில் 95 ஆண்டுகளாக நடக்கும் பீடித்தொழில் தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேலப்பாளையம், வள்ளியூர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், தென்காசி பழமையான பீடி உற்பத்தி மையங்கள் ஆகும். வட தமிழகத்தில் திருச்சி, குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய இடங்களிலும் பீடித்தொழில் நடைபெறுகிறது.
பெரிய பீடி தயாரிப்பு நிறுவனங்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ORIGIN OF BEEDI INDUSTRIES IN INDIA, TAMILNADU AND TIRUNELVELI
- ↑ "Ground Realities of Beedi Workers in Tamilnadu" (PDF). Archived from the original (PDF) on 2019-10-30. Retrieved 2019-10-30.
- ↑ "Problems and Challenges of Beedi Workers in Tamilnadu" (PDF). Archived from the original (PDF) on 2019-10-30. Retrieved 2019-10-30.
- ↑ IT raids Tamil Nadu’s top beedi manufacturing company
- ↑ [1]
- ↑ ASAL MALABAR BEEDI DEPOT PRIVATE LIMITED