பீடி
பீடி (beedi) ஒரு வகை குச்சிபோன்ற புகைக்கும் சிகரெட் வகையாகும். தெண்டு இலையில் சிறிதளவு நிக்கோட்டீன் கரைசலால் பதப்படுத்தப்பட்ட உலர்ந்த புகையிலைத் தூளைக் கலந்து சுருட்டி, மடித்து பின் மெல்லிய நூலால் சுற்றி பீடி தயாரிப்பர்.
வட இந்தியாவில் மார்வாடிகள்கள், வெற்றிலையில் பாக்குத்தூள், மூலிகை மற்றும் நறுமண வாசனை கொண்ட பொருட்களுடன் கலந்து வாயில் அரைத்து சுவைத்துத் துப்பப்படும் பீடாவிலிருந்து, பீடி எனும் சொல் வரப்பெற்றது.
தமிழ்நாட்டில் பீடித் தொழில்
தொகுதமிழ்நாட்டில் பீடித் தொழில் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் குடிசைத் தொழிலாக நடைபெறுகிறது.[1] பொதுவாக பெண்களே இத்தொழிலில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.[2]
நோய்கள்
தொகுதொடர்ந்து பீடி புகைப்பவர்களுக்கு வாய் மற்றும் நுரையிரல் புற்று நோய்கள் மற்றும் இதய நோய்கள் பீடிக்க அதிக வாய்ப்புள்ளது. [3]