பீட்டர் மண் பாம்பு
பீட்டர் மண் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | யூரோபெல்டிசு
|
இனம்: | யூ. பீட்டர்சி
|
இருசொற் பெயரீடு | |
யூரோபெல்டிசு பீட்டர்சி (பெடோம், 1878) | |
வேறு பெயர்கள் [2] | |
|
பீட்டர் மண் பாம்பு, பீட்டர் கேடய வால் மற்றும் கேடய வால் மண் பாம்பு எனப் பொதுவாக அழைக்கப்படும் யூரோபெல்டிசு பீட்டர்சி, ஐரோபெல்டிடே குடும்பத்தைச் சேர்ந்த நச்சற்றப் பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் இந்தியாவில் காணப்படுகிறது.
சொற்பிறப்பியல்
தொகுபீட்டர் மண் பாம்பின் சிற்றினப் பெயரான பீட்டர்சி, செருமன் ஊர்வனவியல் அறிஞர் வில்கெல்ம் பீட்டர் (1815-1883) நினைவாக இடப்பட்டுள்ளது.
புவியியல் வரம்பு
தொகுயூ. பீட்டர்சி தென்னிந்தியாவில் ஆனைமலை மலைகளில், 4000 முதல் 5000 அடி உயரத்தில் காணப்படுகிறது.
வாழ்விடம்
தொகுயூ. பீட்டர்சியின் விருப்பமான இயற்கை வாழிடம் காடு ஆகும் .
விளக்கம்
தொகுயூ. பீட்டர்சி முதுகுபுறம் சீரான பழுப்பு அல்லது மஞ்சள் புள்ளிகளுடன் பழுப்பு நிறத்திலிருக்கும். வயிற்றுபுறத்தில் ஒழுங்கற்ற மஞ்சள் நிறப் புள்ளிகள் உள்ளன.
இதனுடைய உடல் மொத்த நீளம் (வால் உட்பட செமீ (7 + 1⁄2 அங்குலம்) 19 செ.மீ. ஆகும்.
மென்மையான முதுகுப்பகுதியில் 17 வரிசைகளில் நடுப்பகுதியில், தலைக்குப் பின்னால் 19 வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. வயிற்றுப் பகுதியில் 151 180 செதிலகளும் வாலடியில் 6 முதல் 11 செதில்கள் காணப்படும்.
முன் முனை கூர்மையாக காணப்படும். நாசி செதில் தலையின் கவசப் பகுதியின் நீளத்தை விட சற்று குறைவாக உள்ளது. கண்கள் சிறியன. வால் வட்டமாகவோ அல்லது சற்று பக்கவாட்டாக தட்டையாகக் காணப்படும். வால் இறுதியில் காணப்படும் முனைய முதுகெலும்பு செதில்கள் தனித்தனியாக பலவரிகளுடன் காணப்படும். இறுதியில் காணப்படும் உடல் மேல் செதில் குறுக்கு முகட்டுடன் மழுங்கி காணப்படும்.
நடத்தை
தொகுயூ. பீட்டர்சி நிலத்திலும் மண்ணில் புதைந்தும் வாழக்கூடிய பாம்பு ஆகும்.
இனப்பெருக்கம்
தொகுயூ. பீட்டர்சி உள்பொரி முட்டையிடும் பாம்பாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ species:Bhargavi Srinivasulu; species:Chelmala Srinivasulu; species:Varad B. Giri; species:Nirmal U. Kulkarni; species:Sanjay S. Thakur (2013). "Uropeltis petersi ". The IUCN Red List of Threatened Species (IUCN) 2013: e.T178298A1530760. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T178298A1530760.en. http://www.iucnredlist.org/details/178298/0. பார்த்த நாள்: 10 January 2018.
- ↑ "Uropeltis petersi ". The Reptile Database. www.reptile-database.org.
மேலும் வாசிக்க
தொகு- Beddome, R.H. (1878). "Descriptions of new Uropeltidae from Southern India, with Remarks on some previously-described Species". Proceedings of the Zoological Society of London 1878 (1): 154–155. (Silybura petersi, new species, p. 154).
- Beddome, R.H. (1886). "An Account of the Earth-Snakes of the Peninsula of India and Ceylon". Annals and Magazine of Natural History, Fifth Series 17: 3–33. (Silybura Petersi, p. 22).
- George Albert Boulenger. (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. (Silybura petersii, p. 261).
- Sharma, R.C. (2003). Handbook: Indian Snakes. Kolkata: Zoological Survey of India. 292 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8181711694.
- Malcolm Arthur Smith (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Uropeltis petersi, new compination, p. 84).
வெளி இணைப்புகள்
தொகு- Uropeltis petersiஇல்Reptarium.cz ஊர்வன தரவுத்தளம். அணுகப்பட்டது 13 டிசம்பர் 2007.