பீனைல்(முக்குளோரோமெத்தில்)பாதரசம்

பீனைல்(முக்குளோரோமெத்தில்)பாதரசம் (Phenyl(trichloromethyl)mercury) என்பது C6H5HgCCl3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனைல்(டிரைகுளோரோமெத்தில்)மெர்க்குரி என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கரிம கரைப்பான்களில் கரையக்கூடிய ஒரு வெள்ளை நிற திண்மப் பொருளாக இது காணப்படுகிறது. இருகுளோரோகார்பீன் சேர்மத்தின் மூலமாக இது பயன்படுத்தப்படுகிறது. வளையபுரோப்பேனேற்ற வினைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். டெட்ராகுளோயெத்திலீனை அடி மூலக்கூறாகக் கொண்டு இவ்வினை விளக்கப்பட்டுள்ளது. வினையின் தயாரிப்பு அறுகுளோரோவளையபுரோப்பேன் ஆகும்:[1]

பீனைல்(முக்குளோரோமெத்தில்)பாதரசம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
பீனைல்(டிரைகுளோரோமெத்தில்)மெர்க்குரி
இனங்காட்டிகள்
3294-57-3 Y
ChemSpider 69255
EC number 221-960-9
InChI
  • InChI=1S/C6H5.CCl3.Hg/c1-2-4-6-5-3-1;2-1(3)4;/h1-5H;;
    Key: MVIAEGXPYBMVPT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 76799
  • C1=CC=C(C=C1)[Hg]C(Cl)(Cl)Cl
UNII JH955G783H Y
பண்புகள்
C7H5Cl3Hg
வாய்ப்பாட்டு எடை 396.06 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 117–118 °C (243–244 °F; 390–391 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H310, H330, H373, H410
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
C6H5HgCCl3 → C6H5HgCl + CCl2
CCl2 + Cl2C=CCl2 → C3Cl6

தயாரிப்பு

தொகு

பீனைல் பாதரசக் குளோரைடுடன் இருகுளோரோகார்பீன் மூலங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் பீனைல்(முக்குளோரோமெத்தில்)பாதரசத்தை தயாரிக்கலாம். சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டின் காரம்/ஆலோபார்ம் வினையும், வெப்பச்சிதைவு வினையும் இத்தயாரிப்பு வினையில் உள்ளடங்கும்:[2][3]

NaO2CCCl3 + C6H5HgCl → C6H5HgCCl3 + NaCl + CO2

தொடர்புடைய சேர்மங்கள்

தொகு

பீனைல்(புரோமோயிருகுளோரோமெத்தில்)பாதரசம் (சி.ஏ.எசு பதிவு எண் 3294-58-4) மற்றும் பீனைல்(முபுரோமோமெதில்)பாதரசம் (சி.ஏ.எசு பதிவு எண் 3294-60-8) ஆகியவை நெருக்கமாக தொடர்புடைய சேர்மங்களில் அடங்கும்.[4] எக்சு கதிர் படிகவியல் முடிவுகளின் படி, முதலாவது சேர்மம் பாதரசத்தில் கிட்டத்தட்ட நேரியல் ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளது, C-Hg-C பிணைப்புக் கோணம் 179° ஆகவும் Hg-C பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 2.047 Å ஆகவும் காணப்படுகிறது.[5]

பிசு(முக்குளோரோமெத்தில்)பாதரசம் Hg(CCl3)2 என்ற ஒரு சேர்மமும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. José Barluenga (2001). "Encyclopedia of Reagents for Organic Synthesis". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. DOI:10.1002/047084289X.rp141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93623-5. 
  2. Ted J. Logan (1966). "Phenyl(trichloromethyl)mercury". Organic Syntheses 46: 969. doi:10.15227/orgsyn.046.0098. 
  3. Seyferth, D.; Lambert, R. L. (1969). "Halomethyl-metal compounds XX. An improved synthesis of phenyl(trihalomethyl)mercury compounds". Journal of Organometallic Chemistry 16: 21–26. doi:10.1016/S0022-328X(00)81631-9. 
  4. Shipman, Michael (2001). Encyclopedia of Reagents for Organic Synthesis. DOI:10.1002/047084289X.rp140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93623-5. 
  5. R. E. Bachman; B. R. Maughon; D. J. McCord; K. H. Whitmire; W. E. Billups (1995). "Bromodichloromethyl)phenylmercury". Acta Crystallogr. C 51 (10): 2033–2035. doi:10.1107/S0108270195004501.