பீனைல்-2-நைட்ரோபுரோப்பீன்
பீனைல்-2-நைட்ரோபுரோப்பீன் (Phenyl-2-nitropropene) என்பது C9H9NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் சிஏஎசு எண் 705-60-2 ஆகும்[1]. ஒரு காரவினையூக்கியின் முன்னிலையில் பென்சால்டிகைடுடன் நைட்ரோயீத்தேன் வினைபுரிவதால் பீனைல்-2-நைட்ரோபுரோப்பீன் உருவாகிறது. இவ்வினையில் வினையூக்கியானது நைட்ரோயீத்தேனை புரோட்டான் நீக்கம் செய்து ஒத்ததிர்வு நிலைபெற்ற எதிர்மின் அயனியை உருவாக்குகிறது. இந்த எதிர்மின் அயனி அணுக்கரு கவரியாக ஆல்டிகைடுடன் சேர்ந்து ஒரு பீட்டா நைட்ரோ ஆல்ககாலாக உருவாகிறது. இது அடுத்ததாக நீர்நீக்கம் செய்யப்பட்டு நைட்ரோ ஆல்க்கீன் உருவாகிறது. இவ்வினை நைட்ரோ ஆல்டால் வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பீனைல்-2-நைட்ரோபுரோப்பீன் மருந்து வகைப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆடெரால் என்ற மருந்துக் கலவையை தொழிற்சாலைகளில் தயாரிக்க இது பயன்படுகிறது. கவனக் குறைவு மிகையியக்கக் குறைபாடு என்ற உளவியல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு இம்மருந்தைப் பயன்படுத்துகிறார்கள்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-பீனைல்-2-நைட்ரோபுரோப்பீன்
| |
வேறு பெயர்கள்
P2NP, β-மெத்தில்-β-நைட்ரோபுரோப்பீன், (2-நைட்ரோ-1-புரோப்பீனைல்)பென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
705-60-2 [1] | |
ChemSpider | 1266396 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 1549520 |
| |
பண்புகள் | |
C9H9NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 163.17 கி மோல்−1 |
தோற்றம் | திண்மம் |
உருகுநிலை | 64 முதல் 66 °C (147 முதல் 151 °F; 337 முதல் 339 K) |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | தீங்கு விளைவிக்கும்(Xn) |
R-சொற்றொடர்கள் | R22, R36/37/38 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Alfa MSDS பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்