பீனைல் அசிட்டேட்டு
வேதிச் சேர்மம்
பீனைல் அசிட்டேட்டு (Phenyl acetate) என்பது C8H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனால் மற்றும் அசிட்டைல் குளோரைடின் எசுத்தராக இச்சேர்மம் கருதப்படுகிறது. ஆசுபிரினை கார்பாக்சில் நீக்கம் செய்தும், பீனாலை அசிட்டிக் நீரிலியுடன் வினைபுரியச் செய்தும் பீனைல் அசிட்டேட்டைத் தயாரிக்கலாம்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பீனைல் அசிட்டேட்டு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
பீனைல் எத்தனோயேட்டு | |
வேறு பெயர்கள்
பீனால் அசிட்டேட்டு
(அசிட்டாக்சி) பென்சீன் அசிட்டாக்சிபென்சீன் | |
இனங்காட்டிகள் | |
122-79-2 | |
ChEBI | CHEBI:8082 |
ChemSpider | 28969 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31229 |
| |
பண்புகள் | |
C8H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 136.15 g·mol−1 |
அடர்த்தி | 1.075 கி/மிலி[1] |
உருகுநிலை | −30 °C (−22 °F; 243 K) |
கொதிநிலை | 195–196 °C (383–385 °F; 468–469 K)[1] |
-82.04•10−6செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 76 °C (169 °F; 349 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பீனைல் அசிட்டேட்டை சோப்பாக்குதல் செயல்முறை வழியாக பீனால் மற்றும் அசிட்டேட்டு உப்பாகப் பிரிக்கலாம். இதற்கு பீனைல் அசிட்டேட்டுடன் சோடியம் ஐதராக்சைடு போன்ற வலிமையான காரத்தைச் சேர்த்து சூடாக்க வேண்டும். வினையில் உருவாகும் விளைபொருட்களை வெப்பப்படுத்தியும் சுண்ணமாக்கம் செய்தும் அல்லது வெப்பப்படுத்தியும் வடிகட்டியும் பிரித்துக் கொள்ளலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Phenyl acetate, Alfa Aesar