பீமா சமிதி

நேபாளத்தில் காப்பீட்டு வணிகத்தை ஒழுங்குபடுத்தும் ஓர் அரசு அமைப்பு

பீமா சமிதி (Beema Samiti) என்பது நேபாளத்தில் காப்பீட்டு வணிகத்தை ஒழுங்குபடுத்தும் ஓர் அரசு அமைப்பாகும். இந்த அமைப்பு நேபாள நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. அமைப்பின் தலைமை அலுவலகம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ளது.[1][2]

பீமா சமிதி
Beema Samiti
बीमा समिति
துறை மேலோட்டம்
அமைப்பு1992; 32 ஆண்டுகளுக்கு முன்னர் (1992)
தலைமையகம்இலலித்பூர்
வலைத்தளம்nib.gov.np

வரலாறு

தொகு

2004 ஆம் ஆண்டில் பீமா சமிதி அமைப்பு நேபாள வங்கியின் கீழ் மால் சலானி டாதா பீமா நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் காப்பீட்டு நிறுவனம் என்ற நோக்கில் ஒரு காப்பீட்டு அமைப்பாகச் செயல்பட இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது[3] 2049 ஆம் ஆண்டு வரை பீமா சமிதியின் காப்பீட்டு வணிகமானது காப்பீட்டுச் சட்டம், 1968 மூலம் கட்டுப்படுத்தப்பட்டது.1992 ஆம் ஆண்டில் சட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு காப்பீட்டுச் சட்டம், 1992 என்று மாற்றப்பட்டன. 1992 ஆம் ஆண்டு காப்பீட்டுச் சட்டத்தின் அடிப்படையில் பீமா சமிதி உருவாக்கப்பட்டது.[4][5]

அமைப்பு முறை

தொகு

பீமா சமிதி அமைப்பு இதன் கொள்கைகளை வகுத்து செயல்படுத்த ஒரு குழுவைக் கொண்டுள்ளது. இக்குழு பின்வரும் நான்கு பிரிவுகளையும் கொண்டுள்ளது:[6]

  • சட்டம் மற்றும் ஒழுங்குமுறை பிரிவு
  • மனித வளம் மற்றும் காப்பீட்டுக் கொள்கைப் பிரிவு
  • மேற்பார்வை, விவசாயம் & நுண் காப்பீடு, மறு காப்பீடு/ஆராய்ச்சி
  • மேலாண்மை தகவல் அமைப்பு மற்றும் உரிமப் பிரிவு

மேற்கோள்கள்

தொகு
  1. Gurung, Jas Bahadur (2010). "Insurance and Its Business in Nepal". Journal of Nepalese Business Studies 7 (1): 70–79. doi:10.3126/jnbs.v7i1.6409. பன்னாட்டுத் தர தொடர் எண்:2676-1238. https://www.nepjol.info/index.php/JNBS/article/view/6409. பார்த்த நாள்: 2021-03-25. 
  2. Republica. "Finance Minister instructs Beema Samiti to step up its efforts". My Republica. பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  3. "बीमा समिति ५१ बर्ष पुग्दा, बीमा पहुँच भने १७ प्रतिशत पुग्यो". INSURANCEKHABAR.COM. பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  4. Nepal, Rabindra (2012). The insurance market in Nepal (Thesis). பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  5. Maharjan, Rajendra (2019). "Corporate Governance and Financial Performance of Insurance Companies in Nepal". International Research Journal of Management Science 4: 99–117. doi:10.3126/irjms.v4i0.27888. 
  6. "Organization Overview – Beema Samiti". பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமா_சமிதி&oldid=3915077" இலிருந்து மீள்விக்கப்பட்டது