பீரங்கி வானூர்தி
பீரங்கி வானூர்தி (gunship) என்பது கனரக வானூர்தித் துப்பாக்கி தரித்த ஒரு படைத்துறை வானூர்தியாகும். இது தரை இலக்குகளைத் தாக்கவோ அல்லது வான்வழித்தாக்குதல் அல்லது வான்வழி ஆதரவு கொடுப்பதையோ முதன்மையாகக் கொண்டது. தற்கால பயன்பாட்டில் 'பீரங்கி வானூர்தி' என்பது தரை அல்லது கடல் இலக்குகளைத் தாக்குவதற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட (பக்கவாட்டில் சுடுவதற்காக) கனரக ஆயுதங்களைக் கொண்ட நிலைத்த இறக்கை வானூர்திகளைக் குறிக்கிறது.[1][2][3] இந்த பீரங்கி வானூர்திகள் பரவல் தாக்குதல்களுக்குப் பதிலாக இலக்கை வட்டமிடும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டுகள்
தொகு- உலங்கு வானூர்தி
- ஏஎச்-64 அப்பாச்சி
- சி.எச்.-47 சினூக், ஏ.சி.எச். வகை
- மில் எம்.ஐ.-24
- எச்ஏஎல் இலகுரக போர் உலங்கு வானூர்தி
- எச். ஏ. எல். ருத்ரா
- யு.எச்.-60 பிளக் கோக், சிறப்பு நோக்கம்
உசாத்துணை
தொகு- ↑ Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.
- ↑ Ballard 1982, ப. 9.
- ↑ Hamlin 1970.