பீஷ்மர் (2003 திரைப்படம்)

பீஷ்மர் 2003இல் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இது நடிகர் ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான முதல் படமாகும். இப்படத்தில் ரஞ்சித் மற்றும் தேவயானி இருவரும் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர், இவர்களுடன் ராமி ரெட்டி, ரியாஸ் கான், அனு மோகன், இளவரசு,வாசு விக்ரம், சாதிக் மற்றும் குழந்தை பிரகஷிதா ஆகியோரும் நடித்திருந்தனர். நடிகர் ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் இதை தயாரித்திருந்தார், எஸ். பி. வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்க 2003 செப்டம்பர் 27 அன்று வெளிவந்தது.[1][2][3][4]

பீஷ்மர்
இயக்கம்ரஞ்சித்
தயாரிப்புபிரியா ராமன்
கதைரஞ்சித்
இசைஎஸ். பி. வெங்கடேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். டி. கண்ணன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்மாவெரிக் என்டர்டெயின்மெண்ட்
வெளியீடுசெப்டம்பர் 27, 2003 (2003-09-27)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

பீஷ்மர் (ரஞ்சித்) ஒரு நேர்மையான காவல் அதிகாரி. அவர் கௌரி தேவயானியுடன் திருமணம் செய்து கொண்டு அவர்களின் ஆறு வயதுடைய மகளான பாப்பாத்தியுடன் வாழ்ந்து வருகிறார். பீஷ்மர் ஊழல் நிறைந்த காவல் அதிகாரிகள் நிறைந்துள்ள வேறு புதிய துறைக்கு மாற்றப்படுகிறார். அங்கே, ஆதி (இளவரசு), தண்டபாணி (வாசு விக்ரம்), உதவி ஆணையாளர் சிங்கம்பூலி ([சாதிக்]), மற்றும் இரக்கமற்ற அரசியல்வாதியான ஆர்.கே. (ராமி ரெட்டி) ஆகியோருடன் விரைவில் மோதல் ஏற்படுகிறது. நீதிமன்ற வாசலில் சிங்கம்புலியை தாக்கியதற்காக பிஷ்மர் பணியிடைநீக்கம் செய்யப்படுகிறார்.

பின்னர், பீஷ்மர் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். கௌரி அவரை விடுதலை செய்வதற்கான வழக்கறிஞர் செலவினங்களுக்காக தனது சிறுநீரகத்தை விற்கிறார். பீஷ்மர் , சரியான நேரத்தில் மருந்தினை கொண்டு வர முடியாத காரணத்தால் அவரது மனைவி மருத்துவமனையில் இறந்துவிடுகிறார். பின்னர், பீஷ்மர் தனது தனது அனைத்து எதிரிகளையும் பழி வாங்குகிறார். மேலும் சமுதாயத்தில் உள்ள தீமைகள் தன்னை விட அதிக சக்திவாய்ந்தவையாக இருப்பதை அவர் புரிந்து கொண்டு தனது மகள் பாப்பாத்தியுடன் ஒரு புதிய வாழ்க்கை தொடங்க முடிவு செய்கிறார்.

நடிகர்கள் தொகு

ஒலித்தொகுப்பு தொகு

எஸ். பி. வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்க 2003 செப்டம்பர் 27 அன்று வெளிவந்தது. இதில் ஒரு பாடலை பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ளார்.

தொகுப்பு பாடல் பாடியவர் காலம்
1 'நாடகம் போல் வாழ்க்கையிலே' உண்ணிமேனன் 2:13

விமர்சனங்கள்n தொகு

தி இந்துவில் மாலதி ரெங்கராஜன் இவ்வாறு எழுதுகிறார். உரையாடல் பகுதியில் ரஞ்சித் நல்ல மதிப்பெண்களை பெற்றுவிட்டார். அனாலும் மற்ற துறைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.[5] சிஃபி வலைதளம் திரைக்கதையில் இருந்த குறையை சுட்டிக் காட்டியது.[6][7][8]

வரவேற்பு தொகு

படத்தின் தோல்விக்குப் பின், நிதி இல்லாமை காரணமாக ரஞ்சித் தனது அடுத்த சொந்த படத்தை தயாரிக்க முடியவில்லை. மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடிக்க ரஞ்சித் கவனத்தை செலுத்தினார்..[9][10][11]

மேற்கோள்கள் தொகு

  1. "Find Tamil Movie Bheeshmar" இம் மூலத்தில் இருந்து 20 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110820084716/http://www.jointscene.com/movies/kollywood/Bheeshmar_-_2003/2636. பார்த்த நாள்: 2011-08-29. 
  2. "Ranjith ready for next - Tamil Movie News". Indiaglitz.com. 2005-11-12. http://www.indiaglitz.com/channels/tamil/article/18088.html. பார்த்த நாள்: 2016-12-02. 
  3. Unni R. Nair (2010-04-22). "Uyarnthavan to hit screens in May". இந்தியன் எக்சுபிரசு. http://archive.indianexpress.com/news/uyarnthavan-to-hit-screens-in-may/608864/. பார்த்த நாள்: 2016-12-02. 
  4. "Priya Raman on a creative high". தி இந்து. 2005-07-30. http://www.thehindu.com/mp/2005/07/30/stories/2005073000830300.htm. பார்த்த நாள்: 2016-12-02. 
  5. Malathi Rangarajan (2003-09-26). "Bheeshmar". The Hindu. http://www.hindu.com/thehindu/fr/2003/09/26/stories/2003092601340201.htm. பார்த்த நாள்: 2016-12-02. 
  6. "Review : Bheeshmar". சிஃபி. 2003-09-24. http://www.sify.com/movies/bheeshmar-review-tamil-pclvsXfiahiih.html. பார்த்த நாள்: 2016-12-02. 
  7. "Bheeshmar - Balaji's Thots". bbthots.com. http://www.bbthots.com/reviews/2003/bheeshmar.html. பார்த்த நாள்: 2016-12-02. 
  8. "BizHat.com -Bhishmar Review". movies.bizhat.com. http://movies.bizhat.com/review_bhishmar.php. பார்த்த நாள்: 2016-12-02. 
  9. "Ranjith to rock in summer - Tamil Movie News". Indiaglitz.com. 2010-04-12. http://www.indiaglitz.com/channels/tamil/article/56076.html. பார்த்த நாள்: 2016-12-02. 
  10. "Ranjith all set to begin next venture - Tamil Movie News". Indiaglitz.com. 2004-07-14. http://www.indiaglitz.com/channels/tamil/article/9830.html. பார்த்த நாள்: 2016-12-06. 
  11. "Behindwoods : Ranjith is back". Behindwoods.com. 2005-02-09. http://www.behindwoods.com/News/9-2-05/ranjith_film.htm. பார்த்த நாள்: 2016-12-02.