பீ.பி பாதசாரிகள் பாலம்
பீ.பி பாதசாரிகள் பாலம் (BP Pedestrian Bridge), அல்லது சுருக்கமாக பிபி பாலம் (BP Bridge), ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள ஒரு தீராந்தி நடைபாலம் ஆகும். இப்பாலம் பிறிட்ஸ்கர் பரிசு-பெற்ற கட்டிடக் கலைஞர் பிராங்க் கெரியினால் வடிவமைக்கப்பட்டது. இது 2004 சூலை 16 இல் கிராண்ட் பூங்காவிலுள்ள மில்லெனியம் பூங்காவுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.[1]
பிபி பாதசாரிகள் பாலம் BP Pedestrian Bridge | |
---|---|
ஆள்கூற்று | 41°52′58″N 87°37′14″W / 41.8828°N 87.6206°W |
வாகன வகை/வழிகள் | பாதசாரிகள் |
கடப்பது | கொலம்பசு பாதை |
இடம் | சிகாகோ (குக் மாவட்டம்) ஐக்கிய அமெரிக்கா |
Characteristics | |
வடிவமைப்பு | தீராந்திப் பாலம் |
கட்டுமான பொருள் | துருவேறா எஃகு, வலுவூட்டிய பைஞ்சுதை, வன்மரம் |
மொத்த நீளம் | 935 அடிகள் (285.0 மீ) |
அகலம் | 20 அடிகள் (6.1 மீ) |
கீழ்மட்டம் | 14 அடி 6 அங். (4.4 மீ) |
History | |
வடிவமைத்தவர் | பிராங்க் கெரி |
Engineering design by | இசுக்கிட்மோர், ஓவிங்சு, மெரில் |
கட்டி முடித்த நாள் | மே 22, 2004 |
திறக்கப்பட்ட நாள் | சூலை 16, 2004 |
இப்பாலத்தின் கட்டுமானத்திற்கு பீ.பி நிறுவனம் $5 மில்லியன்கள் நிதியுதவி செய்தது. பிராங்க் கெரி வடிவமைத்த முதலாவது பாலம் இதுவாகும்.[2] பீபி பாலம் பாம்பு வடிவில் வளைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[3] அதன் சொந்த எடையால் ஏற்படும் கட்டமைப்புச் சிக்கல்கள் இல்லாமல் அதிக சுமைகளைத் தாங்க வடிவமைக்கப்பட்ட இப்பாலம், தகட்டு உலோகத்தைப் பயன்படுத்தியதற்காக பல விருதுகளை வென்றது. இந்தப் பாலம் அதன் அழகியலுக்குப் பெயர் பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Category: Intensive Industrial/Commercial". Green Roofs for Healthy Cities. 2005. Archived from the original on சூன் 8, 2008. பார்க்கப்பட்ட நாள் May 30, 2008.
- ↑ Cohen, Laurie (July 2, 2001). "Band shell cost heads skyward – Millennium Park's new concert venue may top $40 million". Chicago Tribune. Newsbank. Archived from the original on December 20, 2014. பார்க்கப்பட்ட நாள் June 1, 2008.
- ↑ Kamin, Blair (July 18, 2004). "BP Bridge – **** – Crossing Columbus Drive – Frank Gehry, Los Angeles". Chicago Tribune. Newsbank. Archived from the original on December 20, 2014. பார்க்கப்பட்ட நாள் June 1, 2008.