புண்ணியகோடி
புண்ணியகோடி ( transl.மேன்மையான செயல்), எ ட்ரூத்ஃபுல் மதர் என்றும் வெளியிடப்பட்டது 2020ஆம் ஆண்டு இரவிசங்கர் வெங்கடேசுவரன் இயக்கிய இந்திய சமசுகிருத மொழி இயங்குபடம் .[1][2] இது சமசுகிருத மொழியில் வெளியான முதல் இயங்குபடம் ஆகும்.
புண்ணியகோடி Punyakoti | |
---|---|
இயக்கம் | இரவிசங்கர் வெங்கடேசுவரன் |
தயாரிப்பு | சிந்து எசு கே |
கதை | இரவிசங்கர் வெங்கடேசுவரன் அன்வர் அலி (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு |
|
படத்தொகுப்பு | மனோஜ் கனோத் |
கலையகம் | பொம்மலாட்ட ஊடகம் |
வெளியீடு | மார்ச்சு 25, 2020 |
ஓட்டம் | 85 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | சமசுகிருதம் |
புண்யகோடி என்பது இரவிசங்கர் எழுதிய குழந்தைகளுக்கான கதையாக வெளிவந்த புத்தகத்தின் தழுவலாகும்.[3] கூட்டவழி மூலம் பெறுதல் முறையில் இப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் 18 மார்ச் 2020 அன்று இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் சான்றிதழைப் பெற்றது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதன் திரையரங்கு வெளியீடு நிறுத்தப்பட்டது. இறுதியாக சமசுகிருத பாரதி திரைப்படத்தை இணையவழி விமியோ மூலம் 25 மார்ச் 2020 அன்று திரையிடப்பட்டது. மேலும் நெற்ஃபிளிக்சு 31 மார்ச் 2020 அன்று இந்தப் படத்தை இதன் திரைப்படப் பட்டியலில் சேர்த்தது.
சுருக்கம்
தொகுஎப்பொழுதும் உண்மையைப் பேசும் ஒரு பசுவைப் பற்றி கன்னட மொழியில் எழுதிய கர்நாடகாவின் பிரபலமான நாட்டுப்புறப் பாடலை அடிப்படையாகக் கொண்டது புண்யகோடி. இக்கதை மனித-விலங்கு மோதலைச் சித்தரிக்கும் வடிவத்தில் பொழுதுபோக்கு மற்றும் தகவல். நேர்மை மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்ற செய்தியை அடிப்படையாக கொண்டது. வேதகாலத்தில் காவிரி ஆற்றின் கரையோரமாக இருந்த கருநாடு கிராமத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற பாடலின் மூல ஆதாரம் பத்ம புராணத்தின் ஸ்ரீஷ்டிகண்டின் பதினெட்டாவது அத்தியாயம் ஆகும்.
நடிகர்கள்
தொகுவெளியீடு
தொகுபுண்யகோடி முதலில் 2016-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் 2018-க்கு தாமதமானது.[1][5] இப்படம் 2019 திரைப்பட சந்தையில் திரையிடப்பட்டது.[6] இது திரைப்படமாக ஏப்ரல் 2020-ல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று நெற்ஃபிளிக்சில் எண்ணிம முறையில் வெளியிடப்பட்டது.[5][6]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "India's First Sanskrit Animation Film has 30 Animators working on it and Ilaiyaraaja's Music". thebetterindia. 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18."India's First Sanskrit Animation Film has 30 Animators working on it and Ilaiyaraaja's Music". thebetterindia. 16 June 2015.
- ↑ "Bengalurean gives Kannada folk song animated avatar in Sanskrit". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 June 2018. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
- ↑ "First Sanskrit animation movie to crowd-source content". thehindu. 2014-11-18. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
- ↑ K., Bhumika (24 March 2016). "Making the U-turn home". தி இந்து.
- ↑ 5.0 5.1 Govind, Ranjani (27 March 2020). "Watch the first Sanskrit animation film 'Punyakoti' at home". தி இந்து (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
- ↑ 6.0 6.1 "Industry Screenings 2019". Issuu.