புதிய மனிதன் (சிற்றிதழ்)
தமிழ்நாட்டு சிற்றிதழ்
புதிய மனிதன் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையிலிருந்து 1985 மே முதல் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இந்த இதழின் ஆசிரியராக சி. மதிவாணனும், சிறப்பாசிரியராக கவிஞர் இன்குலாப்பும் இருந்தனர்.[1]
உள்ளடக்கம்
தொகுபுதிய மனிதன் ஒவ்வொரு இதழின் அட்டைச் சித்திரமும் அமைப்பும் கவிதை அழகோடு கருத்து நயம் செறிந்த ஓவியமாகத் திகழ்ந்தது என்கிறார் வல்லிக்கண்ணன். புதிய மனிதனில் இன்குலாப், இளவேனில், செ. கணேசலிங்கன், பாவண்ணன் ஆகியோரின் கதைகள், கட்டுரைகள் வெளிவந்தன. பூமணி, ஆர். சூடாமணி ஆகியோரின் கதைகளும் வெளியாகியிருக்கின்றன. வண்ணச்சிறகு, தமிழன்பன், பாரதிவண்ணன், பாவண்ணன் கவிதைகள், எஸ். சண்முகம் மொழிபெயர்த்துத் தருகிற ‘கறுப்புக் கவிதைகள்’ இந்தப் பத்திரிகைக்கு உணர்வூட்டின.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 281–283. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.