புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதுசத்திரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 84,311 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 21,575 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 316 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]


  1. ஏ. கே. சமுத்திரம்
  2. ஏழூர்
  3. கதிராநல்லூர்
  4. களங்காணி
  5. கல்யாணி
  6. கண்ணூர்பட்டி
  7. கரடிப்பட்டி
  8. காரைக்குறிச்சி
  9. காரைக்குறிச்சி புதூர்
  10. லக்கபுரம்
  11. மின்னாம்பள்ளி
  12. நவனி தோட்டக்கூர்பட்டி
  13. பாச்சல்
  14. பாப்பிநாயக்கன்பட்டி
  15. சர்க்கார் நாட்டாமங்கலம்
  16. சர்க்கார் உடுப்பம்
  17. செல்லப்பம்பட்டி
  18. தாளம்பாடி
  19. தத்தாத்திரிபுரம்
  20. தாத்தையங்கார்பட்டி
  21. திருமலைபட்டி

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Pachayat Union and Village Pachayats of Namakkal District
  2. Census of Namakkal district 2011
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்