புத்தர் கோயில், பெருஞ்சேரி

புத்தர் கோயில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி என்னும் ஊரில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள புத்தர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1]

புத்தர் கோயில், பெருஞ்சேரி


அமைவிடம்

தொகு

இக்கோயில் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் சுந்தரப்பன்சாவடியில் இருந்து கிளியனூர் செல்லும் சாலையில் 0.5 கிமீ தொலைவில் உள்ள பெருஞ்சேரியில் உள்ளது. [2]

அமர்ந்த நிலை

தொகு

இங்கு 5 அடி 3 அங்குலம் உயரமுள்ள அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிலை ஒன்று உள்ளது. இதன் பீடத்தில் தமிழ் எழுத்துக் கல்வெட்டு அழிந்த நிலையில் காணப்படுகிறது. இப்போது இது இருக்கும் இடத்திலிருந்து ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள ஒரு தோப்பில் இச்சிலை முன்பு இருந்தது.[3] வழக்கமான சுருள்முடி, தலைக்கு மேல் தீச்சுடர், நீண்ட காதுகள், மார்பின் குறுக்கில் ஆடை போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாகும். [4]

ரிஷிக்கோயில்

தொகு

இக்கோயில் ரிஷிக்கோயில் என்றழைக்கப்படுகிறது. [2] [5]

வழிபாடு

தொகு

இக்கோயிலில் அவ்வப்போது வழிபாடு நடத்தப்படுகிறது. [6] உள்ளூர் மக்கள் அவ்வப்போது விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. பெருஞ்சேரி புத்தர் கோயில், தமிழிணையம், தமிழர் தகவலாற்றுப்படை
  2. 2.0 2.1 புத்தர் இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறார், தினமணி, 20 செப்டம்பர் 2012
  3. மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1957, ப.46
  4. C.Minakshi, "Buddhism in South India", South Indian Studies-II (Ed.R.Nagaswamt, Society for Archaeological, Historical Research, Madras, 1979, p.115
  5. Census of India 1961, Vol IX, Tamilnadu Par XI-D, Temples of Tamil Nadu, Vol VII (i) Thanjavur, Director of Census Operations, Tamil Nadu and Pondicherry, 1971, p.434
  6. டெல்டா மாவட்டங்களில் பராமரிப்பின்றி புத்தர் சிலைகள், தினமலர், 27 ஏப்ரல் 2014