புத்தாதித்யா முகர்ஜி

பண்டிட் புத்தாதித்ய முகர்ஜி (Budhaditya Mukherjee) [1] (இந்தி: बधादित्य मुरवर्जी) இம்தட்கானி கரானாவின் (பள்ளி) ஒரு இந்துஸ்தானி சித்தார் மற்றும் சுர்பகார் மேதையாவார். [2] இவரது அதிவேக குரலிசையால் அடையாளம் காணப்பட்டார். சிறந்த வீணைக் கலைஞரான பாலச்சந்தரால் "நூற்றாண்டின் சித்தார் கலைஞர்" என்று பிரபலமாக அறிவிக்கப்பட்ட இவர், 1970களில் இருந்து இந்தியா, அமெரிக்கா, ஆத்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பாவிலும் ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். [3]

புத்தாதித்யா முகர்ஜி
இயற்பெயர்बधादित्य मुरवर्जी
பிறப்பு1955 (அகவை 69–70)
துர்க், இந்தியா
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)சித்தார் கலைஞர், சுர்பாகர் கலைஞர்
இசைக்கருவி(கள்)சுர்பாகர், சித்தார்
இசைத்துறையில்1961–தற்போது வரை
இணையதளம்www.budhaditya.com

ஆரம்ப ஆண்டுகளில்

தொகு

இவர் 1955 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிலாயில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். அங்கு இவரது தந்தை பிலாய் எஃகு ஆலையின் உயர் பதவியில் இருந்தார். இவரது தந்தை ஆச்சார்யா பண்டிட் பீமலெந்து முகர்ஜி சித்தார், சரோத், சுர்பகார், உருத்ர வீணை, சாரங்கி, மற்றும் குரலிசை உள்ளிட்ட ஏராளமான கருவிகளில் பயிற்சி பெற்றவர். பெரும்பாலும் மூத்த இசைக்கலைஞர்கள் இவரது வீட்டில் அடிக்கடி சந்தித்து நிகழ்ச்சிகளை வழங்கினார். ஒரு நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாடகர் உஸ்தாத் படே குலாம் அலிகானின் மடியில் தான் உட்கார்ந்ததை புத்தாதித்யா நினைவு கூர்ந்தார்.

புத்தாதித்யாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தை இவருக்கு ஒரு சிறிய சித்தாரில் கற்பிக்கத் தொடங்கினார். அதன்பிறகு பல தசாப்தங்களாக இவருக்கு பயிற்சி அளித்தார்.

1970 ஆம் ஆண்டில், இவர் இரண்டு தேசிய அளவிலான இசைப் போட்டிகளில் வென்றார். விரைவில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேவும், பின்னர் தென்னிந்தியாவின் சிறந்த வீணைக் கலைஞர் பாலச்சந்தர் ஆகியோரால் பாராட்டினைப் பெற்றார். 1975 ஆம் ஆண்டில், அனைத்திந்திய வானொலியின் ஏ- தரக் கலைஞரானார் (1986 இல் உயர் தரத்திற்கு உயர்த்தப்பட்டார்). இராய்ப்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உலோகவியல் பொறியாளராக முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.

நிகழ்ச்சிகள்

தொகு

முகர்ஜி ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மிக சமீபத்தில், கனடாவின் தொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தொராண்டோவின் இராக-மாலா இசைச் சங்கத்தில் இரண்டு முறை நிகழ்த்தினார். [4] [5]

குறிப்புகள்

தொகு
  1. https://www.bimhuis.nl/en/calendar/pandit-budhaditya-mukherjee-2/
  2. Lata, Swarn (2013). The Journey of the Sitar in Indian Classical Music : Origin, History, and Playing Styles. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1475947070.
  3. https://timesofindia.indiatimes.com/city/kolkata/I-have-never-begged-anyone-for-concerts-Pandit-Budhaditya-Mukherjee/articleshow/47398390.cms
  4. "Aga Khan Museum". Aga Khan Museum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
  5. "Sublime Sitar with Pandit Budhaditya Mukherjee (October 19, 2019)". Aga Khan Museum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தாதித்யா_முகர்ஜி&oldid=3952736" இலிருந்து மீள்விக்கப்பட்டது