உருத்ர வீணை

உருத்ர வீணை (Rudra veena) (வட இந்தியாவில் 'உருத்ர விணா' என்றும் 'பிண்' என்றும் அழைக்கப்படுகிறது) இந்திய துணைக் கண்டத்திலிருந்து உருவான பழங்கால நரம்பிசைக் கருவியாகும். இது இந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய பாரம்பரிய இசைக் கருவிகளில் ஒன்றான வீணையின் முக்கிய வகைகளில் ஒன்றாகும்.

உருத்ர வீணை
உருத்ர வீணை
உருத்ர வீணை
உருத்ர வீணை
வேறு பெயர்கள்உருத்ர வீணை, பீணா, பிண்
வகைப்பாடுநரம்பிசைக் கருவி
மேலதிக கட்டுரைகள்
ஒரு தனது காதலனை எதிர்பார்த்து இளம் பெண் ஒரு கிளிக்கு வீணையை இசைக்கிறாள். 18 ஆம் நூற்றாண்டின் முகலாய ஓவியம் வங்காள பாணியில்

வடிவம்

தொகு

இது 54 அல்லது 62 அங்குலங்களுக்கு இடையில் நீளம் கொண்ட மரம் அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட நீண்ட குழாய் உடலைக் கொண்டுள்ளது. இரண்டு வடிவ மரக் கட்டைகளுக்கு இடையில் 24 படிகள் மற்றும் 7 கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. 4 முக்கிய சரங்களும் 3 சிகாரி சரங்களும் உள்ளன. இந்த நான்கு கம்பிகள் பிரதான பாலத்திற்கு செல்லும் படிக்கட்டுகளுக்கு மேலே உள்ள விட்டங்களின் முனைகளில் உள்ள கம்பிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதை வாசிப்பது கடினமான ஒன்றாகும். யோக வஜ்ராசன நிலையில் அமர்ந்து உருத்ர வீணையைத் தோளில் வைத்து வாசிக்க வேண்டும்.[1]

விளக்கம்

தொகு

உருத்திரன் என்பது இந்துக் கடவுளான சிவனின் பெயர் என்பதால், உருத்ரா வீணை என்றால் சிவனுக்கு அன்பான வீணை என்று பொருள். சிவன் தனது மனைவி பார்வதியால் ஈர்க்கப்பட்டு உருத்ர வீணையை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சிவன் மீதுள்ள பக்தி காரணமாக இராவணன் இதைக் கண்டுபிடித்து அதற்கு உருத்ர வீணை எனப் பெயரிட்டதாகவும் வேறொரு புராணக் கதையும் இருக்கிறது.

இது இன்று அரிதாக வாசிக்கப்படும் ஒரு பழங்கால கருவியாக இருக்கிறது. சுர்பாகர் என்ற இசைக்கருவி 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக உருத்ர வீணை தனது பிரபலத்தை இழந்தது. மெதுவான துருபத்-பாணி இராகங்களின் ஆலாபனைப் பிரிவுகளை சித்தார் கலைஞர்கள் மிக எளிதாக முன்வைக்க சுர்பாகர் அனுமதித்தது. 20 ஆம் நூற்றாண்டில், ஜியா மொஹியுதீன் தாகர் என்பவர் உருத்ர வீணையை பெரிய சுரைக்காய், தடிமனான குழாய், தடிமனான எஃகு சரங்களை (0.45-0.47 மிமீ) ஆகியவற்றை பயன்படுத்த மாற்றியமைத்து மறுவடிவமைப்பு செய்தார். எந்தவொரு மீட்டுக்கட்டையையும் பயன்படுத்தாமல் இசைக்கும்போது இது மென்மையான மற்றும் ஆழமான ஒலியை உருவாக்கியது. இலால்மணி மிசுரா என்பவரால் இக்கருவி சுருதி வீணையாக மாற்றப்பட்டது. [2]

புகைப்படங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
உருத்ர வீணை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்ர_வீணை&oldid=4043441" இலிருந்து மீள்விக்கப்பட்டது