புனாபுட்டி

புனாபுட்டி (Funafuti) என்பது ஒரு பவளத்தீவு ஆகும். இது துவாலு எனும் தீவு நாட்டின் தலைநகரம் ஆகும்.[1][2] இந்நகரத்தின் சனத்தொகை 6,194 ஆகும்.[3] இதனால் துவாலு நாட்டின் மொத்த சனத்தொகையின் 57.2 சதவீதம் இந்நகரைச் சார்ந்துள்ளது. இந்நகரம் 20 தொடக்கம் 400 மீற்றர் அகலமான ஒடுங்கிய நிலப்பரப்பை கொண்டுள்ளது. இந்நகரில் ஓர் விமான நிலையமும் வைக்கு லங்கி எனும் ஹோட்டலும், சில நிருவாகக் கட்டடங்களும், பாரம்பரிய முறையிலும் கற்களாலும் கட்டப்பட்ட பல்வேறு வீடுகளும் காணப்படுகின்றன. இந்நகரின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடமாக துவாலு தேவாலயம் கருதப்படுகின்றது. இந்நகரின் மொத்த பரப்பளவு 275 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.

புனாபுட்டி
பவளத் தீவு
Aerial image of Funafuti atoll
Aerial image of Funafuti atoll
Countryதுவாலு
பரப்பளவு
 • மொத்தம்2.4 km2 (0.9 sq mi)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்6,194
 • அடர்த்தி2,600/km2 (6,700/sq mi)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுTV-FUN

வரலாறு தொகு

இந்நகரினை நிறுவிய முன்னோர்கள் சமோவா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.[4][5] பிரித்தானிய இராணுவத்தை சேர்ந்தவரும் நியூ யோர்க் நகரவாசியுமான ஆர்ன்ட் சுய்லெர் டி பெய்ச்ட்டர் (Arent Schuyler de Peyster) என்பவரே புனாபுட்டி நகரத்திற்கு வருகை தந்த முதலாவது ஐரோப்பியர்.[6][7] துவாலு நாட்டின் தெற்குத் திசையினூடாக வந்த ஆர்ன்ட் சுய்லெர் டி பெய்ச்ட்டர் புனாபுட்டி நகரை அங்கு இனங்கண்டு கொண்டார். அவர் அந்நகரத்திற்கு பிரித்தானிய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், ரெபெக்கா உற்பத்திகளின் (Rebecca's cargo) உரிமையாளருமான எட்வார்ட் எலைஸ் என்பவரின் பெயரை சுருக்கி எலைஸ் தீவு எனும் பெயரை வைத்தார்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. Map of Funafuti. Tuvaluislands.com இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014062359/http://www.tuvaluislands.com/maps/m-funafuti1.htm. 
  2. Lal, Andrick. South Pacific Sea Level & Climate Monitoring Project - Funafuti atoll. SPC Applied Geoscience and Technology Division (SOPAC Division of SPC) இம் மூலத்தில் இருந்து 2014-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140203011855/http://www.pacificdisaster.net/oip/FinalReport/Annex/3_Survey%20LDP/Survey_Diagrams_JPACE-TV.pdf. 
  3. 2012 Population & Housing Census Preliminary Analytical Report (April 2013). "Tuvalu: Millennium Development Goal Acceleration Framework – Improving Quality of Education" (PDF). Ministry of Education and Sports, and Ministry of Finance and Economic Development from the Government of Tuvalu; and the United Nations System in the Pacific Islands. Archived from the original (PDF) on 13 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: numeric names: authors list (link)
  4. Talakatoa O'Brien (1983). Tuvalu: A History, Chapter 1, Genesis. Institute of Pacific Studies, University of the South Pacific and Government of Tuvalu. 
  5. Kennedy, Donald G. (1929). "Field Notes on the Culture of Vaitupu, Ellice Islands". Journal of the Polynesian Society 38: 2–5. http://www.jps.auckland.ac.nz/document/Volume_38_1929/Field_notes_on_the_culture_of_Vaitupu%2C_Ellice_Islands%2C_by_Donald_Gilbert_Kennedy%2C_p_1-99/p1?action=null. 
  6. "De Peyster, Arent Schuyler, 1779–1863. Details of the discovery of the Ellice and de Peyster Islands in the Pacific Ocean in May, 1819". Bibliothèque nationale du Québec. https://ia700300.us.archive.org/27/items/cihm_04051/cihm_04051.pdf. 
  7. The De Peysters. http://corbett-family-history.com/de-peyster. பார்த்த நாள்: 2016-01-02. 
  8. Laumua Kofe, Palagi and Pastors, Tuvalu: A History, Ch. 15, Institute of Pacific Studies, University of the South Pacific and Government of Tuvalu, 1983
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனாபுட்டி&oldid=3574210" இலிருந்து மீள்விக்கப்பட்டது