புனித தாமஸ் சிரோ - மலபார் கத்தோலிக்க தேவாலயம், பாலையூர்

கேரளத்தின், திருச்சூர் மாவட்டதில் உள்ள கிருத்துவ தேவாலயம்

புனித தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், பாலையூர் (St. Thomas Syro-Malabar Church, Palayoor) என்பது இந்தியாவின், மேற்கு கடற்கரையில் கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பாலையூரில் அமைந்துள்ள ஒரு கிருத்துவ தேவாலயம் ஆகும். பாரம்பரிய நம்பிக்கையின் படி, இந்த தேவாலயம் கி.பி. 52 இல்   இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவரான புனித தாமசால் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இங்கு திருத்தூதர் புனித தாமஸ் இங்குள்ள மக்களுக்கு கிறிஸ்தவத்தை பிரசங்கித்து அறிமுகப்படுத்தினார். அவர் இந்தியாவில் நிறுவிய ஏழு தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். மற்றவை கொடுங்கல்லூர், கொக்கமங்கலம், கோட்டக்காவு, கொல்லம், நிரணம், சாயல் (நிலக்கல்) ஆகிய இடங்களில் உள்ளன . அசலான சிறிய தேவாலயம் சிறியது. ஆனால் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலானவை வளரச்சிகள் 17 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டவை ஆகும். [1] [2] [3]

புனித தாமஸ் சிரோ - மலபார் கத்தோலிக்க தேவாலயம், பாலையூர்
புனித தாமஸ் சிரோ - மலபார் கத்தோலிக்க தேவாலயம், பாலையூர்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா கேரளம் இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்(10°34′57″N 76°01′55″E / 10.5825°N 76.0319°E / 10.5825; 76.0319)
சமயம்சிரோ மலபார் தேவாலயம்
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருச்சூர்
நிலைIndependent Episcopal Church

குறிப்புகள்

தொகு
  1. Gazetter 1986
  2. "About Syro-Malabar Church". Archived from the original on 2008-05-12. பார்க்கப்பட்ட நாள் 2009-09-29.
  3. "The Syro-Malabar Church". Syro Malabar website. பார்க்கப்பட்ட நாள் 2009-09-29.

வெளி இணைப்புகள்

தொகு