புனோம் தெய்

புனோம் தெய் (Phnom Dei) என்பது கம்போடியாவில் உள்ள சியெம் ரீப்புக்கு அருகில் உள்ள 272 மீட்டர் உயர குன்று ஆகும்.

புனோம் தெய்

இருப்பிடம் தொகு

பிரதான் அங்கோரியன் கோவில்களில் ஒன்றான பந்தியாய் சிரே சிவாலயத்திற்கு தென் மேற்கிலும் புனோம் குலெனுக்கு தெற்கிலும் புனோம் தெய் அமைந்துள்ளது. கெமர் பேரரசின் தலைநகரமான அங்கோரில் அமைந்துள்ள கோவில் தொகுப்பில் புனோம் தெய் ஒரு பகுதியாகும்[1]:65 [2] .

அங்கோரியன் கோவில் தொகு

மலையின் மேலே ஒரு கோவில் உள்ளது. இக்கோவில் முதலாம் யசோவர்மன் காலத்தில் கி.பி 889 – 910 காலத்தில் கட்டப்பட்டது. புனோம் தெய் மலை உச்சியில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் ஒன்றாகும். புனோம் பேக்கெங், புனோம் பாக் மற்றும் புனோம் குரோம் முதலியன இவ்வகை கோவில்களுக்கு பிற எடுத்துக்காட்டுகளாகும்.

மேற்கோள்கள் தொகு

  • Nick Ray, Cambodia

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனோம்_தெய்&oldid=3701154" இலிருந்து மீள்விக்கப்பட்டது