புன்னப்பரா

கேரளத்தின், ஆலப்புழை மாவட்ட சிற்றூர்

புன்னாப்பரா (Punnapra) என்பது இந்தியாவின், கேரளத்தின், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது அரபிக் கடலின் கரையோரப் பகுதியில், குட்டநாட்டிற்கு மேற்கே அமைந்துள்ளது , இது கேரளத்தின் நெற்களஞ்சியம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

புன்னப்பரா
Punnappira
சிற்றூர்
புன்னப்பரா is located in கேரளம்
புன்னப்பரா
புன்னப்பரா
கேரளத்தில் அமைவிடம்
புன்னப்பரா is located in இந்தியா
புன்னப்பரா
புன்னப்பரா
புன்னப்பரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°26′0″N 76°20′0″E / 9.43333°N 76.33333°E / 9.43333; 76.33333
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழா
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்688004
வாகனப் பதிவுKL-04
அருகில் உள்ள நகரம்ஆலப்பழா

உள்ளாட்சி நிர்வாகம் தொகு

புன்னப்பரா இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • புன்னப்பரா வடக்கு
  • புன்னப்பர தெற்கு

வரலாறு தொகு

 
கம்யூனிஸ்ட் நினைவுத்தூண்
 
ஐ.எம்.டி புன்னாபிரா

இந்தியாவின் விடுதலைக்கு முன்னர் திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக புன்னப்பரா இருந்தது. 1940 களில், தென்னை நார் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சி நல்ல செல்வாக்கை வளர்த்ததுக் கொண்டிருந்தது. மேலும் இக்கட்சியானது தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தது. இதனால் திருவிதாங்கூர் திவான் (பிரதமர்) சே. ப. இராமசுவாமி தொழிலாளர் பிரச்சினைகளை தீர்க்க இதில் தலையிட்டார். ஆனால் சர் சே. ப. ராமசாமி ஐயரின் ஆட்சிக்கு எதிரான ஒரு அரசியல் நடவடிக்கையான மாற்று அரசாங்கத்தை கோரும் தொழிலாளர் பிரிவினருடன் நிலைமை மோசமடைந்தது. புன்னப்பராவில் உள்ள அப்லான் அரோஜ் என்ற நில உடைமையாளரின் கோரிக்கையின் பேரில் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது, மேலும் அவரது வீட்டிற்கு அருகே நடந்த போராட்டத்தில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் காவல்துறை பாசறையை ஏராளமான ஆர்பாட்டக்காரர்கள் தாக்கினர். இதில் நான்கு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர், சுமார் 35 ஆர்பாட்டக்காரர்களும் கொல்லப்பட்டனர். அரசாங்கம் இராணுவச் சட்டத்தை அறிவித்தது, அதன் பின்னர் இராணுவ நடவடிக்கையில் சுமார் 300 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சம்பவங்களின் தொடர் நிகழ்வானது புன்னப்பர-வயலார் எழுச்சி என்று அழைக்கப்படுகிறது. [1] இதை நினைவுகூறும் விதமாக இங்கு புன்னாபிர-வயலார் எழுச்சி தியாகிகளின் தூண் என்ற ஒரு நினைவுச்சின்னம் உள்ளது, ஒவ்வொரு ஆண்டும், இந்த தியாகளின் நினைவு நாளன்று அலப்புழாவில் உள்ள வால்யா சுடுகாட்டில் இருந்து இந்த நினைவுச் சின்னம் வரை ஊர்வலம் நடத்தப்படுகிறது.

புன்னாப்பராவில் உள்ள கல்லூரிகள் தொகு

  • பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, புன்னாப்பரா [2]
  • அரசு டி.டி மருத்துவக் கல்லூரி, ஆலப்புழா
  • கார்மல் பல்தொழில்நுட்பக் கல்லூரி, அரவுகாடு
  • கார்மல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அலப்புழா [3]
  • மார் கிரிகோரியஸ் கல்லூரி புன்னப்பரா [4]

குறிப்புகள் தொகு

  1. Thomas Johnson Nossiter (1982). Communism in Kerala: A Study in Political Adaptation. University of California Press. பக். 90–91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520046672. https://archive.org/details/communisminkeral0000noss. 
  2. http://www.cempunnapra.org
  3. http://carmelcet.in
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னப்பரா&oldid=3580770" இலிருந்து மீள்விக்கப்பட்டது