புபொப 1097
புபொப 1097 (NGC 1097) என்பது போர்னாக்சு என்ற விண்மீன் குழாமில் கிட்டத்தட்ட 45 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு தண்டு கருச்சுருள் அண்டம் ஆகும். இதனை 1790 அக்டோபர் 9 இல் வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார். இவ்வண்டத்தில் மீன்று மீயொளிர் விண்மீன் வெடிப்புகள் அவதானிக்கப்பட்டன.
புபொப 1097 NGC 1097 | |
---|---|
கண்டறிந்த தகவல்கள் (ஜெ2000 ஊழி) | |
விண்மீன் குழு | போர்னாக்சு |
வல எழுச்சிக்கோணம் | 02h 46m 19.0s[1] |
பக்கச்சாய்வு | -30° 16′ 30″[1] |
செந்நகர்ச்சி | 1271 ± 3 கிமீ/செ[1] |
தூரம் | 45 மில். ஒஆ[2] |
வகை | (R'_1:)SB(r'l)bSy1[1] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 9′.3 × 6′.3[1] |
தோற்றப் பருமன் (V) | 10.2[1] |
ஏனைய பெயர்கள் | |
ESO 416- G 20, மு.வி.ப. 10488,[1] ஆர்ப் 77[1] கால்டுவெல் 67 | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
ஏனைய பெரும் விண்மீன் பேரடைகள் போன்று புபொப 1097 இன் நடுவில் ஒரு மீப்பெரும் கருந்துளை காணப்படுகிறது. இக்கருந்துளை நமது சூரியனை விட 140 மில்லியன் மடங்கு அதிக நிறை கொண்டதாகும்.[3] நடுக் கருந்துளையைச் சுற்றி விண்மீன்-தோன்றும் பகுதிகளைக் கொண்ட வளையம் காணப்படுகிறது. வளிமம் மற்றும் தூசிகளைக் கொண்டதாக இப்பகுதிகள் வளையத்தில் இருந்து சுருளாக சுழன்று கருந்துளையை அடைகின்றன.
புபொப 1097 இரண்டு துணை விண்மீன் பேரடைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பெரியது புபொப 1097ஏ என்ற குள்ள நீள்வட்ட பேரடை ஆகும். இது புபொப 1097 ஐ அதன் மத்தியில் இருந்து 42,000 ஒளியாண்டுகள் தொலைவில் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. புபொப 1097பி என்ற குள்ள பேரடை சூரியனின் நிறையைப் போன்று 5 x 106 மடங்காகும்.
காட்சியகம்
தொகு-
புபொப 1097 இல் விண்மீன்களை-உருவாக்கும் வளையம். அவிதொ
-
pஉபொப 1097 இன் 5,500 ஒளியாண்டுகள் அகல நடுப்பகுதி
-
புபொப 1097 ஸ்பிட்சர் விண்வெளித் தொலைநோக்கியூடாக.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 1097. பார்க்கப்பட்ட நாள் 2006-11-25.
- ↑ "Feeding the Monster: New VLT Images Reveal the Surroundings of a Super-massive Black Hole". European Southern Observatory. Archived from the original on 2008-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-03-15.
- ↑ "Astronomers Measure Mass of Supermassive Black Hole in NGC 1097". Sci-news. 18 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2015.
வெளி இணைப்புகள்
தொகு- VLT observations – NGC 1097's "dog-leg" tidal stream
- weblore.com பரணிடப்பட்டது 2006-11-12 at the வந்தவழி இயந்திரம் – NGC 1097: The Galaxy with the Longest known Optical Jets
- Antilhue-Chile – NGC 1097 in Fornax
- ESO பரணிடப்பட்டது 2008-03-04 at the வந்தவழி இயந்திரம் – Very Large Telescope observations of NGC 1097
- Astronomy Picture of the Day – In the Arms of NGC 1097 (2006-12-01)
- The dance of stars and space, 29 December 2012, Thomas Anderson, TG Daily
- புபொப 1097 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images