புய எலும்பு
புய எலும்பு (ஆங்கிலம்:Humerus)[1] மேற்கையில் உள்ள ஒரு நீள எலும்பு வகை ஆகும். இது தோள்பட்டை மற்றும் முழங்கை பகுதிக்கு இடையில் அமைந்த எலும்பு ஆகும். புய எலும்பு மேல்முனை, கீழ்முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டுள்ளது. இது தோள்பட்டை மூட்டு மற்றும் முழங்கை மூட்டு பகுதிகளை கொண்டது.
புய எலும்பு | |
---|---|
![]() புய எலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணத்தில் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | humerus |
MeSH | D006811 |
TA98 | A02.4.04.001 |
TA2 | 1180 |
FMA | 13303 |
Anatomical terms of bone |
அமைப்பு தொகு
புய எலும்பின் மேல்முனையில் உள்ள கோளவடிவ தலைப்பகுதி தோள் எலும்பு வெளிப்புற குழி வடிவ பகுதியுடன் இணைந்து தோள்பட்டை மூட்டை உருவாக்குகிறது. இதன் கீழ்முனை இணைப்பு பகுதி அரந்தி எலும்பு மற்றும் ஆரை எலும்பின் மேல்முனையின் இணைப்பு பகுதியுடன் இணைந்து முழங்கை மூட்டை உருவாக்குகிறது.
பெரும்பாலான பாலூட்டிகளில் மனிதர்களைப் போலவே புய எலும்பு கரங்களை உடலுடன் இணைக்கும் பகுதியாகவே உள்ளது. ஆனால் இதன் நீளம் மாறுபடுகிறது.[2]
மேற்கோள்கள் தொகு
- ↑ Harper, Douglas. "Humerus". http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=humerus&searchmode=none. பார்த்த நாள்: 6 November 2014.
- ↑ Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. பக். 198–199. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-910284-X. https://archive.org/details/vertebratebody0000rome_a5a9.