புருக்கேசியா நானா
புருக்கேசியா நானா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | சுகுமோடோ
|
குடும்பம்: | கிக்கோனிடே
|
பேரினம்: | புருக்கேசியா
|
இனம்: | பு. நானா
|
இருசொற் பெயரீடு | |
புருக்கேசியா நானா கிளாவு மற்றும் பலர், 2021[1] |
புருக்கேசியா நானா, என்றும் நானோ பச்சோந்தி என அழைக்கப்படுவது பச்சோந்தியில் ஒரு வகைச் சிற்றினமாகும். இது வடக்கு மடகாசுகரில்[2] உள்ள மோண்டேன் மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் உலகின் மிகச் சிறிய ஊர்வனவாம்.[1] இந்தச் சிற்றினம் குறித்து 2021இல் முதன்முதலாக விவரிக்கப்பட்டது. பழுப்பு நிறமான இந்த பச்சோந்தியின் முதிர்ந்த ஆணின் மொத்த நீளம் 22 மி.மீட்டரும், பெண்ணின் நீளம் 29 மி.மீட்டர் ஆகும்.[1][3] மற்ற பச்சோந்திகளைப் போலல்லாமல், புரூக்கேசியா நானா வண்ணங்களை மாற்றாமலும் காட்டில் உள்ள மரங்களில் வாழாமலும், வனங்களின் தளத்தை விரும்புகிறது. மற்ற புரூக்கேசியா பேரினத்தின் சிற்றினங்களைப் போல, பெண்களும் பொதுவாக ஆண்களை விட பெரியவை. மற்ற முதுகெலும்பிகள் முதிர்ச்சியடையும் போது இவை ஏன் சிறியதாக இருக்கிறது என்பது ஒரு மர்மமாகும்.[4]
வடக்கு மடகாசுகரில் உள்ள சோராட்டா மாசிபில் மழைக்காடுகளில் 2021ஆம் ஆண்டில் ஹெர்பெட்டாலஜிஸ்ட் ஃபிராங்க் கிளா மற்றும் பிற ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்தைக் கண்டுபிடித்தனர். மடகாஸ்கரில் காடழிப்பு காரணமாக இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று தெரிகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Glaw, Frank; Köhler, Jörn; Hawlitschek, Oliver; Ratsoavina, Fanomezana M.; Rakotoarison, Andolalao; Scherz, Mark D.; Vences, Miguel (28 January 2021). "Extreme miniaturization of a new amniote vertebrate and insights into the evolution of genital size in chameleons" (in en). Scientific Reports 11 (1): 2522. doi:10.1038/s41598-020-80955-1. பப்மெட்:33510189. பப்மெட் சென்ட்ரல்:7844282. http://www.nature.com/articles/s41598-020-80955-1.
- ↑ Bittel, Jason (1 February 2021). "New chameleon species may be world’s smallest reptile". National Geographic. https://www.nationalgeographic.com/animals/2021/01/tiny-chameleon-smallest-reptile-discovered-madagascar/?sf242514294=1.
- ↑ "'Smallest reptile on earth' discovered in Madagascar". BBC News. 5 February 2021. பார்க்கப்பட்ட நாள் 5 February 2021.
- ↑ 4.0 4.1 Andrew, Scottie (3 February 2021). "A newly discovered chameleon less than an inch long could be the world's smallest reptile". CNN. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.