புருசோத்தம தேவன்
வீர பிரதாப புருசோத்தம தேவன் ( Vira Pratapa Purushottama Deva) கி.பி. 1467 முதல் 1497 முதல் ஆட்சி செய்த இரண்டாவது கஜபதி பேரரசர் ஆவார்.[1] இவரது தந்தை கஜபதி கபிலேந்திர தேவன் ரௌதராயன் தனது வாரிசாக இவரைத் தேர்ந்தெடுத்தார். இவர் வெற்றிகரமான போர்வீரராக இருந்தார். மேலும், தனது தந்தையின் விருப்பப்படி விஜயநகரப் பேரரசுக்கு எதிரான போரில் வெற்றிகரமாக ஈடுபட்டார்.
புருசோத்தம தேவன் | |
---|---|
கஜபதி | |
கஜபதி புருசோத்தம தேவன், காஞ்சி அபிஞானம் மற்றும் மாணிக்கியாவின் ஒடியா நாட்டுப்புறக் கதைகளின்படி, புரி ஜெகன்நாதர் கோயில் சுவர் ஓவியத்தில் சித்தரிக்கப்படுகிறார். | |
2வது கஜபதி பேரரசர் | |
ஆட்சிக்காலம் | 1467 – 1497 கி.பி |
முன்னையவர் | கபிலேந்திர தேவன் |
பின்னையவர் | பிரதாபருத்ர தேவன் |
இறப்பு | 1497 கி.பி |
துணைவர் | பத்மாவதி |
மரபு | சூரிய குலம் |
தந்தை | கபிலேந்திர தேவன் |
தாய் | பார்வதி தேவி |
மதம் | இந்து சமயம் |
புருசோத்தம தேவன், பதினாறாம் நூற்றாண்டில் கவிஞர் புருசோத்தம தாசன் எழுதிய காஞ்சி காவேரி உபாக்கியனா (கவிதை) புராணத்தின் முக்கிய கதாபாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.[2] பின்னர் இது வங்காள கவிஞர் ரங்கலால் பந்தோபாத்யாயினால் வங்காள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.[3] இந்த புராணக்கதை ஒடிசாவின் ஜெகந்நாதர் வழிபாட்டு பாரம்பரியத்தின் இந்து பக்தர்களிடையே பிரபலமானது.
இராணுவ சாதனைகள் மற்றும் பிராந்திய விரிவாக்கங்கள்
தொகுபேரரசர் கபிலேந்திர தேவனின் மூத்த மகனான பட்டத்து இளவரசர் கம்வீர தேவன், புருசோத்தமனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்.[4] கட்டக்கின் பராபதி கோட்டையில் புருசோத்தமன் இராணுவ ரீதியாக பலமாக இருந்தார். ஆளும் குடும்பத்தின் இந்த உள் மோதலைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் விஜயநகரத்தின் சாளுவ நரசிம்மர், கொண்டப்பள்ளி மற்றும் ராஜமகேந்திரவரம் போன்ற கஜபதி பேரரசின் சில பகுதிகளைத் தாக்கி கைப்பற்றினார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kings Of Puri". www.speakingtree.in. பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
- ↑ Ashwini Kumar Ghose, Makers of Indian Literature. New Delhi: Sahitya Akademi. 1998. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126004916.
- ↑ Historical Dictionary of the Bengalis. Maryland, United States: Scarecrow Press. Inc. 2013. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810853348.
- ↑ Prataprudradeva, The Last Great Suryavamsi King of Orissa. New Delhi: Northern Book Centre. 2007. pp. 2–4, 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8172111953.
- ↑ "RELATIONS WITH THE GAJAPATHIS" (PDF). shodhganga.inflibnet.ac.in. பார்க்கப்பட்ட நாள் 6 September 2017.
மேலும் படிக்க
தொகு- Tarini Charan Rath. Purushottama Deva, King of Orissa.