பராபதி கோட்டை

ஒடிசாவிலுள்ள பழங்கால கோட்டை

பராபதி கோட்டை (Barabati fort) என்பது பொ.ச. 989 ஆம் ஆண்டு ஒடிசாவின் கட்டக்கில் ஆட்சி செய்த சோமவம்சி (கேசரி) வம்சத்தின் மரகத கேசரி என்ற மன்னனால் கட்டப்பட்ட கோட்டையாகும்.[1] கோட்டையின் இடிபாடுகள் அதன் அகழி, வாயில் மற்றும் ஒன்பது மாடி அரண்மனையின் மண் மேடு ஆகியவை மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. இது கடந்த நாட்களின் நினைவுகளை எழுப்புகிறது. இன்று இது பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளின் இடமான நவீன பராபதி விளையாட்டரங்கத்திற்கு அருகில் உள்ளது. கோட்டையில் இருந்து வெகு தொலைவில் நகரின் முதன்மை தெய்வமான கட்டக் சண்டிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலும் உள்ளது. இப்போது பழைய கட்டக்கை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக படகு சவாரி வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த பூங்காவாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்டக்கையின் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

பராபதி கோட்டை
பராபதி கோட்டையின் நுழைவாயில்
வகைகோட்டை
அமைவிடம்கட்டக்
ஆள்கூற்றுகள்20°29′4.67″N 85°51′51.93″E / 20.4846306°N 85.8644250°E / 20.4846306; 85.8644250
உயரம்பொ.ச. 989
நிறுவனர்சோமவம்சி (கேசரி) வம்சத்தின் மரகத கேசரியின் பழைய கோட்டை கட்டப்பட்டது
கீழைக் கங்க மன்னன் மூன்றாம் அனங்கபீமதேவனால் புதுக் கோட்டை கட்டப்பட்டது. (1211-1238)
பாராபதி கோட்டையின் பிரதான நுழைவாயில்

அமைவிடம் தொகு

இந்த இடைக்காலக் கோட்டையானது  20°29′1.32″N 85°52′3.36″E / 20.4837000°N 85.8676000°E / 20.4837000; 85.8676000 இல், கட்டக்கின் மையத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில், வடக்கில் மகாநதி, தெற்கில் உள்ள காட்டயோடி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளால் உருவாக்கப்பட்ட கரையோரப் பகுதியின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 14.62 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

பராபதிக் கோட்டை பொ.ச. 987இல் சோமவம்சி வம்சத்தின் ஆட்சியாளர் மரகத கேசரியால் கட்டப்பட்டது. அப்போது கட்டக்கை என்றழைக்கப்பட்ட கட்டக்கைப் பாதுகாக்க ஒரு கல் தடுப்பு கட்டப்பட்டது. பராபதி கோட்டை கட்டப்பட்ட நாள் குறித்து அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றனர்.

பொ.ச. 1568 இல், நகரம் வங்காளத்தின் கர்ராணிகளின் கைகளுக்கும், பின்னர் 1576இல் முகலாயப் பேரரசிடம் வீழ்ந்தது.[2] [3] 1741இல் மராட்டியப் பேரரசிடம் சென்றது. 1803இல் ஒடிசாவின் மற்ற பகுதிகளுடன் கட்டக்கும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. தென்கிழக்கு தொடருந்து மண்டலம் 1919இல் கட்டாக்கை சென்னை, கொல்கத்தா ஆகியவற்றுடன் இணைத்தது. இது 1936ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தின் தலைநகராக மாறியது. மேலும், 1948 ஆம் ஆண்டு தலைநகர் புவனேசுவரத்துக்கு மாற்றப்படும் வரை அது தொடர்ந்தது. இந்த நகரம் 1989இல் ஆயிரம் ஆண்டுகளை நிறைவு செய்தது.

முஸ்லிம்கள் மற்றும் மராட்டியர்களின் ஆட்சியின் போது இது ஒடிசாவின் தலைநகராகத் தொடர்ந்தது. அக்டோபர் 1803இல் பிரித்தானிய இராணுவம் பராபதி கோட்டையைக் கைப்பற்றியது. மேலும் இது பல ஆட்சியாளர்களின் சிறைச்சாலையாகவும் மாறியது. 1800இல் குஜங்காவின் அரசன், 1818இல் சர்குஜா மன்னன் ஆகியோர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இந்தக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். கூடுதலாக, ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் கோட்டையை அழிக்கும் நாசவேலைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

கட்டிடக்கலை தொகு

 
கோட்டையின் கொத்தளங்களும் , அரண்களும்
 
பராபதி கோட்டை - ஒன்பது மாடி வளாகமும் யானை தொழுவத்தின் இடிபாடுகளும்

கோட்டையின் திட்டம் சதுரமாக உள்ளது. இது 102 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அனைத்துப் பக்கங்களிலும் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 10 மீட்டர் அகலமும், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் 20 மீட்டர் அகலமும் கொண்ட கல் வேயப்பட்ட அகழியால் சூழப்பட்டுள்ளது. நுழைவாயிலைத் தவிர கோட்டைச் சுவர் முழுவதும் காணவில்லை. 1915 முதல், அதன் தேசிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்த இடம் இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் அறிவிக்கப்பட்டது.

சான்றுகள் தொகு

  1. "Barabati Fort". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. Mountstuart Elphinstone, Edward Byles Cowell (1866). The History of India: The Hindú and Mahometan Periods (Public Domain). Murray. https://books.google.com/books?id=1VgOAAAAQAAJ. 
  3. Jaques. Dictionary of Battles and Sieges: F-O. Greenwood Publishing Group. https://books.google.com/books?id=Dh6jydKXikoC&pg=PA516. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பராபதி_கோட்டை&oldid=3385645" இலிருந்து மீள்விக்கப்பட்டது