சண்டி
சண்டி ( சமஸ்கிருதம் : Caṇḍī ) அல்லது சண்டிகா ( Caṇḍika ) என்பவர் ஒரு இந்து பெண் தெய்வம் ஆவார். சண்டிகா பார்வதியின் ஒரு வடிவம். [1] இவர் பிரம்மத்தின் மொத்த ஆற்றலைக் குறிக்கிறார். தீமைகளை அழிக்க வெளிப்பட்ட பார்வதியின் சக்திவாய்ந்த, திகிலூட்டும் வடிவம் சண்டிகா. கோபத்தின் காரணமாக சண்டிகா வடிவம் மிகவும் மூர்க்கமானதாகவும் அணுக முடியாததாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. தீய செயல்களை இவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். தீய செயல்களைப் பிடிக்காது, தீய செயல்களை புரிபவரைக் கண்டு மிகவும் கோபப்படுபவர். இவர் தீய செயல்களை செய்தவர்களை இரக்கமின்றி தண்டிப்பார் எனப்படுகிறது. இவருடைய கோபம் தேவி மகாத்மியத்தில் வெளிப்படுகிறது. ஏழு வயது சிறுமி சமஸ்கிருத வசனங்களில் சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறார். [2] [3]
சண்டி | |
---|---|
சண்டியின் நெவாரி பாரம்பரிய ஓவியம் | |
தேவநாகரி | चण्डी |
சமசுகிருதம் | Caṇḍī |
வகை | பார்வதி, ஆதிசக்தி, சக்தி, துர்க்கை, பிரம்மம் |
மந்திரம் | ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे oṁ aiṁ hrīṁ klīṁ cāmuṇḍāyai vicce |
துணை | சிவன் |
சொற்பிறப்பு
சண்டி அல்லது சண்டிகா என்பது தேவி மகாத்மியத்தில் மிக உயர்ந்த தெய்வீகத்தைக் குறிக்கும் பெயர். சண்டி பிரம்மத்தின் சக்தி அல்லது ஆற்றலைக் குறிக்கிறது. சண்டா என்ற சொல் அசாதாரண பண்புகளை குறிக்கிறது, இதனால் பிரம்மத்தை குறிக்கிறது. நேரம் மற்றும் வெளியைப் பொறுத்தவரை அதன் முழுமையான சுதந்திரத்தின் காரணமாக இவர் அசாதாரணமானவர். மேலும் சண்டி என்ற சொல் கோபத்துடன் பிரம்மத்தின் உமிழும் சக்தியையும் குறிக்கிறது.[4] தேவி வழிபாடு தொடர்பானவற்றை எழுதிய எழுத்தாளரான பாஸ்கரராயர், சண்டியை 'கோபமான, பயங்கரமான அல்லது உணர்ச்சிவசப்பட்டவர்' என்று வரையறுக்கிறார்.[5] ஒரு தொல்குடி தெய்வம் சமஸ்கிருதமயமாக்கப்பட்டதா அல்லது அடக்கப்பட்ட தெய்வம் மீட்கப்பட்டதா என்று அறிஞர்கள் விவாதிக்கையில், உண்மை நிலை என்னவென்றால், ஆரம்ப காலத்திலிருந்தே, தேவி பிராமண நூல்களில் ஒரு உயர்ந்த தெய்வமாக சுட்டப்படுகிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல் இந்தியத் துணைக் கண்டத்தில் வணங்கப்பட்டார். அவரது தடங்களைக் கண்டுபிடிக்கும் அறிஞர்கள், இந்திய மனதில் படிந்துள்ளதால், ஆரம்பகால தத்துவ தூண்டுதலின் ஒரு பகுதியாக இருந்ததைக் காட்டுகிறார்கள். சி. மெக்கன்சி பிரவுன் எழுதுகிறார்:
"மகாபாரத காவியத்துக்கு பிற்காலத்திலும், ஹரிவம்சத்திலும் (கி.பி 100-300) தெய்வங்களுக்கான பாடல்களிலும் பிராமண பக்தி வாழ்க்கையிலும் பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்துவருவதை வெளிப்படுத்துகின்றன. ... தேவி-மகாத்மியத்தில் தெய்வீக பெண்மையின் மறுபிரவேசம் பல நூற்றாண்டுகால போக்குகளின் உச்சக்கட்டமாகவும் இருந்தது. "
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-21. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
- ↑ Preston, James J. Cult of the Goddess: Social and Religious Change in a Hindu Temple. Prospect Heights, IL: Waveland, 1985
- ↑ Bagchi, Jasodhara. “Representing Nationalism: Ideology of Motherhood in Colonial Bengal.”Economic and Political Weekly 25.42–43 (1990): 65–71
- ↑ "Chandika name origin". பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
- ↑ Coburn, Thomas B., Encountering the Goddess: A Translation of the Devi-Mahatmya and a Study of Its Interpretation, p.134