புருஸ்கி (Bruzgi) கிழக்கு ஐரோப்பிய நாடான பெலரஸ் நாட்டின் குரோட்னோ பிரதேசத்தில் உள்ள குரோட்னோ மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இந்த கிராமம் பெலருஸ்-போலந்து எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. [1]இக்கிராமத்தின் அருகில் போலந்து நாட்டின் சுசுனித்சா கிராமம் உள்ளது.

புருஸ்கி
Брузгі
கிராமம்
Map
புருஸ்கி is located in பெலருஸ்
புருஸ்கி
புருஸ்கி
ஆள்கூறுகள்: 53°33′19″N 23°40′54″E / 53.55528°N 23.68167°E / 53.55528; 23.68167
நாடு பெலருஸ்
பிரதேசம்குரோட்னோ பிரதேசம்
மாவட்டம்குரோட்னோ மாவட்டம்
இடக் குறியீடு+375-15

2020களில் பெலரஸ்-ஐரோப்பிய ஒன்றிய எல்லைப் பிணக்குகள்

தொகு

2021-ஆம் ஆண்டில் பெலருஸ் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வந்த ஈராக் மற்றும் சிரியா வாழ் 1,000 குர்து மக்களை அகதிகள் என்ற போர்வையில், பெலருஸ் அரசு, இக்கிராமத்தின் வழியாக போலாந்து நாட்டின் எல்லைக் கிராமமான சுசுனித்சா வழியாக ஜெர்மனிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது.[2] [3] பெலருஸ் நாட்டின் இச்செயலை கண்டிந்த போலந்து அரசு நாட்டின் எல்லைபுறங்களில் அவசர நிலையை அமல்படுத்தியதுடன், 12,000 இராணுவப் படைகளையும் நிறுத்தி வைத்து, பெலராஸ் நாட்டின் திட்டத்தை முறியடித்தது. மத்திய கிழக்கு நாடுகளின் மக்களைக் கொண்டு பெலருஸ் நாடு நடத்தும் கபட நாடகத்தை, போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சேர்ந்து, பெருஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகசெங்கோவை, இது ஒருவகையான போர்த் தாக்குதல் எனக்கடுமையாகக் கண்டித்தது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. [Назвы населеных пунктаў Рэспублікі Беларусь: Гродзенская вобласць: нарматыўны даведнік / І. А. Гапоненка і інш.; пад рэд. В. П. Лемцюговай. — Мн.: Тэхналогія, 2004. — 469 с. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 985-458-098-9 (DJVU).]
  2. "Belarus escorts 1,000 migrants towards Polish border". the Guardian (in ஆங்கிலம்). 2021-11-08. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
  3. AFP, Mary Sibierski and Bernard Osser for (2021-11-08). "Migrants Massing at Border With Belarus Help, Poland Says". The Moscow Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
  4. "Hundreds of migrants head toward Polish-Belarusian border". POLITICO (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-08. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருஸ்கி&oldid=3397132" இலிருந்து மீள்விக்கப்பட்டது