புரூசு நெறிமுறை

புரூசு நெறிமுறை (Bruce's Code) என்பது கிபி 1821-இல் கிழக்கிந்திய நிறுவனத்தினால் இயற்றப்பட்ட திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவில்களின் நிர்வாகம், நிர்வாகப் பணியாளர்களுக்கான விதிகளின் தொகுப்பாகும்.

அன்றாட விவகாரங்களில் தலையிடாமல், பழக்கவழக்கங்கள், முந்தைய பயன்பாடுகளின் அடிப்படையில் திருமலை திருப்பதி கோவில்களின் நிர்வாகப் பணிகளை எளிதாக்க 42 விதிகளைக் கொண்ட ஒரு நெறிமுறையாக நன்கு வரையறுக்கப்பட்ட விதிகளாக இவை உள்ளன.[1]

நோக்கம்

தொகு

திருப்பதி கோவில்களைக் கைப்பற்றுவதில் ஆங்கிலேயர்களின் நோக்கம், முறையான நிர்வாகத்தின் மூலம் கோவில் நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதையும் தவறாக நிர்வகிப்பதையும் தடுப்பதற்கும், பிரித்தானியக் கருவூலங்களுக்கு நிதியை மாற்றுவதை நியாயப்படுத்துவதற்கும் கோவிலின் வருமானத்தை ஒழுங்கமைப்பதன் மூலம் அரசுக்கு நிலையான வருவாயை உருவாக்குவதாகும்.

வரலாறு

தொகு

கிபி 18ஆம் நூற்றாண்டில் இந்து பேரரசுகள் வீழ்ச்சியடைந்த பிறகு, கிபி 18ஆம் நூற்றாண்டில் திருமலை திருப்பதி கோவில்கள் முசுலீம் ஆட்சியாளர்களின் கீழ் வந்தன. ஆங்கிலேயர்களின் வருகையுடன், கோயில்களின் நிர்வாகம் கிபி 1801-இல் ஆற்காடு நவாபுகளிடமிருந்து கிழக்கிந்திய நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.[2]

ஆற்காடு நவாபுகளின் ஆட்சியின் போது, கோவிலில் நிரந்தரச் சேவையை உறுதி செய்வதற்காக, இந்து அல்லாத ஆட்சியாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை சுயமாகத் திரட்டுவதன் மூலமோ அல்லது சில பரம்பரை ஊழியர்களை அந்நியப்படுத்துவதன் மூலமோ கோயிலின் நிகர வருமானம் மதச்சார்பற்ற அதிகாரிகளால் பாராட்டப்பட்டது. அப்போதைய ஆற்காடு நவாப் சந்தா சாகிப் இறந்ததைத் தொடர்ந்து, ஆங்கிலேயர்கள் முகமது அலி கான் வாலாஜாவினை ஆற்காட்டின் நவாபாக நியமித்தனர். இவர் ஆங்கிலேயர்களின் அடிமைத்தனமாகப் பணியாற்றினார். இதன் விளைவாக, முகமது அலி கான் வாலாஜாவுன் வாரிசுகளும் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் கடன்களை ஏற்படுத்தினர். திருப்பதி பராகனாவுடன் கோவில் பெயரளவில் ஆற்காடு நவாபுகளின் சொத்தாக இருந்தபோதிலும், அந்தக் கடனாகச் செய்யப்பட்ட செலவை ஈடுசெய்யும் வகையில், கோவில்களின் வருவாயைக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஆற்காடு நவாபுகள் ஒதுக்கினர்.

1789இல் கோட்டையில் வருவாய் வாரியம் நிறுவப்பட்ட பிறகு, கிழக்கிந்திய நிறுவனம் ஆண்டுக்கு நிலையான வருவாயை உருவாக்குவதற்காக ஆற்காடு நவாபுகளிடமிருந்து கோவிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. கிபி 1801 வாக்கில், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் ஆற்காடு நவாப்புகளை வெளியேற்றி, ஆற்காட்டைத் தங்கள் களத்துடன் இணைத்து, கோவிலின் வருமானத்திற்காக திருப்பதி கோயில்களின் நேரடி நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது.

1803ஆம் ஆண்டில், திருப்பதி மாவட்டம் அமைந்துள்ள சித்தூர் மாவட்ட ஆட்சியர், திருப்பதி பகோடா குறித்த "இசுடேட்டன்சு அறிக்கை" என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் முழுக் கணக்கையும், அட்டவணைகள், பூசைகள், செலவுகள், நிலங்களின் அளவு போன்றவற்றைக் காட்டும் ஓர் அறிக்கையை வருவாய் வாரியத்திற்கு அனுப்பியிருந்தார். இந்த அறிக்கைகள் சிறியதாக இருந்தாலும், "குரோம்" மற்றும் "கேரட்" ஆகியோரால் ஜெகநாதர் கோவில் குறித்து பிரித்தானிய அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப அறிக்கை போன்றே இருந்தது. கி. பி. 1821இல் "புரூசு நெறிமுறை" என்று அழைக்கப்படும் கோவில், கோவில் ஊழியர்களின் நிர்வாகத்திற்கான விதிகள் உருவாக்கப்படும் வரை பிரித்தானிய ஆட்சியாளர்கள் "இசுடேட்டனின் அறிக்கையை" பயன்படுத்தி நிறுவனத்தைக் கட்டுப்படுத்தி நிர்வகித்தனர்.[3]

இதற்கிடையில், திருமலை திருப்பதி கோவில் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, தவறாகக் கோவிலை நிர்வகித்தது பற்றிய பல நிகழ்வுகளும் புகார்களும் வாரியத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதால், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் 1817ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை VIIஐ நிறைவேற்றியது. இந்த ஒழுங்குமுறையின் மூலம், வாரியத்தின் கடமை "பொது மேற்பார்வை, விரிவான மேலாண்மை அல்ல". இருப்பினும், திருமலை, திருப்பதி கோவிலின் நிர்வாகத்தின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களிலும் வாரியம் தலையிட்டது. சித்தூர் மாவட்டத்தின் அப்போதைய ஆணையரான புரூசு, திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்காக "புரூசு நெறிமுறை" என்று அழைக்கப்படும் 42 விதிகளைக் கொண்ட ஒரு நெறிமுறையினை உருவாக்கினார்.

மத நிறுவனங்களை நிர்வகிப்பதன் காரணமாக இந்துக் கோவில்களில் நடத்தப்படும் விக்கிரகாராதனையில் நிறுவனத்தின் அதிகாரிகள், ஆட்கள் பங்கேற்பதை இங்கிலாந்தில் உள்ள "இயக்குநர்கள் நீதிமன்றம்" கடுமையாக எதிர்த்தது. மத அறக்கட்டளைகளின் நிர்வாகத்தைக் கைவிட உத்தரவிட்டது. இது விக்டோரியா மகாராணி ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் கிபி 1842-43-இல் நடைமுறைக்கு வந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Well-defined rules contained in the Bruce Code drawn up in 1821 on the basis of previous usages and customs and did not interfere in its day-to-day affairs[usurped!]
  2. "After the fall of the Hindu empires, the Tirumala and Tirupati temples came under the sway of the Nawabs of Arcot, and with the advent of the English, the management passed into the hands of the East India Company in 1801". Archived from the original on 12 July 2011. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  3. - Page 2 - Bruce's Code பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூசு_நெறிமுறை&oldid=4181096" இலிருந்து மீள்விக்கப்பட்டது