புரோங் மாங்கா

புரோங் மாங்கா (Burong mangga) என்பது பிலிப்பீன்சு நாட்டின் துணை உணவாகும். இது மாம்பழத்துடன் உப்பு, சர்க்கரை, மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படுகிறது. முதலில் தண்ணீரும் சர்க்கரையும் மாங்காய் ஊற்றுவதற்கு முன், கொதிக்கவைத்துக் குளிர்விக்கப்படுகிறது. சில வகைகளில் காரத்திற்காக மிளகாய் தூள் கலவை சர்க்கரை நீர் கலவையுடன் சேர்க்கப்படுகிறது. பாரம்பரிய புரோங் மாங்கா உப்பு கரைசலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. பகுதி அளவு விளைந்த பழுக்காத அல்லது ஓரளவு பழுத்த மாம்பழங்கள் இக்கலவையில் ஊரவைத்து புரோங் மாங்கா தயாரிக்கப்படுகிறது. புரோங் மாங்கா தயாரிக்க ’கரபாவோ' மற்றும் 'பிகோ' மாம்பழ வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.[1][2]

புரோங் மாங்கா
சந்தையில் விற்கப்படும் புரோங் மாங்கா
மாற்றுப் பெயர்கள்மாங்காய் ஊறுகாய்
பரிமாறப்படும் வெப்பநிலைதுணை உணவு
தொடங்கிய இடம்பிலிப்பீன்சு

இதையும் பார்க்கவும்

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. "Burong Mangga". Recipe ni Juan. Archived from the original on 8 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Philippine Fermented Foods: Principles and Technology.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோங்_மாங்கா&oldid=3588839" இலிருந்து மீள்விக்கப்பட்டது