மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய் என்பது ஊறுகாய் வகைகளுள் ஒன்றாகும். இது மாங்காயினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றது.[1] இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பிரபலமானது. புளிப்பு/காரமான இந்த ஊறுகாய் வணிக ரீதியாகவும் கிடைக்கிறது.

மாங்காய் ஊறுகாய்
பிலிப்பீன்சு வணிக ரீதியான புரோங் மங்கா

வகைகள் தொகு

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஊறுகாய் பிற பகுதியில் தயாரிக்கப்படும் காற்றில்லா நொதித்தல் பிறகு கூடுதலாக மசாலா கலவையினைச் சேர்ப்பதன் காரணமாக வேறுபடுகிறது.  ஊறுகாய் என்பது முக்கிய பக்க உணவுகள் குறிப்பாகத் தயிர்ச் சாதத்துடன் பரிமாறப்படுகிறது. ஊறுகாய் தயாரிக்கப் பல வகையான காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், பச்சை மா அல்லது மென்மையான மாம்பழம் ஊறுகாய் மாங்காய் ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான பழ வகையாகும். தயாரிக்கப்படும் இடம் மற்றும் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருள்களைப் பொறுத்துப் பல வகையான மாங்காய் ஊறுகாய்கள் வேறுபடுகின்றன. ஆனால் பரந்த அளவில் இரண்டு வகைகள் உள்ளன: முழு மா வடுவினையே (மா பிஞ்சு) பயன்படுத்தி தயார் செய்வதும் மாங்காய்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டித் தயாரிக்கப்படுவதும் என் இரண்டு வகைப்படும். மாவடு ஊறுகாய் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான பாரம்பரிய வகையாகும். இதற்காகக் குறிப்பிட்ட மா வகைகள் உள்ளன. உப்பு, காய்கறி எண்ணெய் மற்றும் காரமான மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி மாவடு ஊறுகாய் தயாரிக்கப்படுகின்றன. இது மிகவும் கவனமாகச் சுகாதாரமாகத் தயார் செயல்படுவதால் பல ஆண்டுகளாக ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்கும்.[2]

மாங்காய் துண்டு ஊறுகாய் தொகு

 
பாக்கித்தான் மாங்காய் ஊறுகாய்
 
வீட்டில் தயார் செய்யப்பட்ட மாங்காய் ஊறுகாய்

ஊறுகாய் செய்யும் போது நீண்ட காலத்திற்கு மிருதுவாக இருக்கக்கூடிய மாங்காயினைப் பயன்படுத்தி துண்டு ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை மாம்பழம் பிரத்தியேகமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்காக ஒட்டப்படுகிறது. இருப்பினும், தரத்தைப் பற்றிக் கவலைப்படாவிட்டால் பெரும்பாலான மாம்பழ வகைகளைப் பயன்படுத்தி ஊறுகாய் செய்யலாம். மிகவும் பிரபலமான மாங்காய் ஊறுகாய்களில் ஒன்று "ஆவக்காய்" ஊறுகாய் என்று அழைக்கப்படுகிறது. இது "உரகயா" என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மசாலா மற்றும் சுவைக்குப் பெயர் பெற்றது. இது பொதுவாக இது அரிசி சோற்றுடன் அல்லது சாஸ் போன்று மற்ற சாதங்களுடன் சாப்பிடப்படுகிறது. இது தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் முக்கிய உணவாகும்.

பாக்கித்தானில், சிந்திரி போன்ற மா வகைகள் மாங்காய் ஊறுகாய் உற்பத்தியில் பிரதானமானவை.[3]

ஊறுகாய் மாங்காய் சட்னி தொகு

இது சட்னி போன்று தயாரிக்கப்படும் ஊறுகாய் ஆகும்.

கடுமங்கோ தொகு

 
கடுமங்கா - இந்தியாவின் கேரளாவிலிருந்து சிறப்பு வகை மாம்பழ ஊறுகாய், மென்மையான மாம்பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது

இது மாங்காய் ஊறுகாயின் மாறுபாடு. இந்த வகையான ஊறுகாய் மென்மையான மாம்பழத்தினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.[4] மாம்பழங்கள் வளரத் தொடங்கும் போது சிறிய மாம்பழங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த ஊறுகாயில் மாம்பழம் துண்டுகளாக வெட்டப்படவில்லை. முழு மாம்பழமும் ஊறுகாய் வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது.

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

 

  1. Verma Sarkar, Petrina. "Aam Ka Achaar (mango pickle)". About.com. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012.
  2. "Baby Mango Pickling Process: Mango Pickle". MangoPickle.net. Archived from the original on 30 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  3. "All hail the king: Mangoes are in full season; Here's how to know which is which". Geo News. https://www.geo.tv/latest/290682-all-hail-mangoes-heres-what-you-need-to-know-about-king-of-fruits. 
  4. "Tender Mango Pickle (Kadumanga Achar)". MyRecip4u.Blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்காய்_ஊறுகாய்&oldid=3567046" இலிருந்து மீள்விக்கப்பட்டது