புரோட்டியோபீடியா


புரோட்டியோபீடியா (Proteopedia) என்பது புரதங்கள் மற்றும் பிற மூலக்கூறுகளின் விக்கி, முப்படிமாண கலைக்களஞ்சியம் ஆகும்.[1][2][3][4] புரத தரவு வங்கியில் (>130,000 பக்கங்கள்) உள்ள ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு பக்கத்தினை இத்தளம் கொண்டுள்ளது. அசிடைல்கொலினெசுடெரேசு,[5] கீமோகுளோபின்[6] மற்றும் ஒளிச்சேர்க்கை அமைப்பு II[7] போன்ற புரதக் கட்டமைப்புகளின் விளக்கமான பக்கங்களும் இந்தத் தளத்தில் உள்ளன. செயல்பாட்டுத் தளங்கள் மற்றும் ஈந்தணைவிகளை முன்னிலைப்படுத்தும் ஜெமால் (Jmol) பார்வையுடன். தனிப்பயனாக்கப்பட்ட மூலக்கூறு காட்சிகளை உருவாக்கப் பயனர்கள் ஜெஎசுமால் நிரை மொழியைக் கற்க வேண்டியதில்லை. தனிப்பயன் காட்சிகள் ஜெஎசுமாலில் காட்சிகளைக் காண்பிக்கும் விளக்க உரையில் "பச்சை இணைப்புகளுடன்" எளிதாக இணைக்கப்படும். இணைய உலாவி இத்தளத்தையும் 3D தகவலையும் அணுகுவதற்குத் தேவையானது. ஆனால் பார்வையாளர்கள் இதனை நிறுவ வேண்டிய அவசியமில்லை.

புரோட்டியோபீடியா
நிறுவன வகைஇலாபநோக்கமற்ற
வலைத்தள வகைஇணையக் கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உருவாக்கியவர்ஜோயல் எல். சுஸ்மேன், எரான் ஹோடிஸ் மற்றும் ஜெய்ம் பிரிலஸ்கி
வணிக நோக்கம்இல்லை
வெளியீடு2007
தற்போதைய நிலைநிரந்தர வேலை நடந்து கொண்டிருக்கிறது
உரலிproteopedia.org

விருது

தொகு

தி சயின்டிசுட் இதழின் சிறந்த இணையதளத்திற்கான 2010 விருதை புரோட்டியோபீடியா வென்றது.[8]

சட்ட அம்சங்கள்

தொகு

உரிம விதிமுறைகள்

தொகு

பயனர்களால் சேர்க்கப்பட்ட அனைத்து உள்ளடக்கமும் இலவசமாகவும் குனூ தளையறு ஆவண இலவச உரிமத்தின் கீழும் உள்ளது. வைசுமேன் அறிவியல் கழக இசுரேல் புரத அமைப்பு கல்வி மையத்தில் புரோட்டியோபீடியாவின் இணைய அணுகல் வழங்கப்படுகிறது.[9]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Proteopedia - a scientific 'wiki' bridging the rift between three-dimensional structure and function of biomacromolecules". Genome Biol. 9 (8): R121. 2008. doi:10.1186/gb-2008-9-8-r121. பப்மெட்:18673581. 
  2. Martz E (2009). "Proteopedia.Org: a scientific "Wiki" bridging the rift between 3D structure and function of biomacromolecules". Biopolymers 92 (1): 76–7. doi:10.1002/bip.21126. பப்மெட்:19117028. 
  3. "Proteopedia: A collaborative, virtual 3D web-resource for protein and biomolecule structure and function". Biochemistry and Molecular Biology Education 38 (5): 341–2. 2010. doi:10.1002/bmb.20431. பப்மெட்:21567857. 
  4. Prilusky, J; Hodis, E.; Canner, D.; Decatur, W. A.; Oberholser, K.; Martz, E.; Berchanski, A.; Harel, M. et al. (Aug 2011). "Proteopedia: A status report on the collaborative, 3D web-encyclopedia of proteins and other biomolecules". Journal of Structural Biology 175 (2): 244–252. doi:10.1016/j.jsb.2011.04.011. பப்மெட்:21536137. 
  5. "Acetylcholinesterase". Proteopedia.
  6. "Hemoglobin". Proteopedia.
  7. "Photosystem II". Proteopedia.
  8. Luiggi C (September 2010). "Web Gems Introducing the winners of the first annual Labbies, our prizes for the best web-based multimedia by labs: Website Winner:Proteopedia". The Scientist 24 (9): 47. http://www.the-scientist.com/2010/9/1/47/1/#website. பார்த்த நாள்: 2022-10-21. "Very absorbing. Kept me looking and playing (and learning) with it for a long time. Very informative and a good resource.". 
  9. "The Israel Structural Proteomics Center". 12 November 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோட்டியோபீடியா&oldid=3590281" இலிருந்து மீள்விக்கப்பட்டது