புரோப்பிடியம் அயோடைடு
வேதிச்சேர்மம்
(புரோப்பிடியம் ஐயோடைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புரோப்பிடியம் அயோடைடு (Propidium iodide) (அல்லது பி.ஐ, PI) ஒளிரும் தன்மை கொண்ட ஒரு வேதிச் சேர்மம். 27 கரிம அணுக்களும் இரண்டு ஐயோடின் அணுக்களும் கொண்ட C27H34I2N4 என்னும் வேதி வாய்பாடு கொண்ட இம் மூலக்கூற்றின் நிறை 668.4 டால் (Da). இவ் வேதிப்பொருள் டி.என்..ஏ வைச் சுட்டிக்காட்ட சாயப்பொருளாக பயன்படுகின்றது. 488 நா.மீ. அலைநீளம் கொண்ட சீரொளி (லேசர் ஒளி)யால் தூண்டப்பட்டால், 562-588 நா.மீ அலையிடை வடிகட்டியால் (bandpass filter) கண்டுபிடிக்கலாம்.
இனங்காட்டிகள் | |
---|---|
25535-16-4 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 104981 |
| |
பண்புகள் | |
C27H34I2N4 | |
வாய்ப்பாட்டு எடை | 668.3946 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோப்பிடியம் அயோடைடுதான் டி.என்.ஏ-வின் அளவை மதிப்பிட மிகப்பெரும்பாலும் பயன்படும் சாயம் [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ Cancer Research UK. 2004. Cell Cycle Analysis - Propidium Iodide. http://science.cancerresearchuk.org/sci/facs/facs_major_apps/cell_cycle_analysis/propidium_iodide/?version=1