புரோப்பியோலால்டிகைடு

வேதிச் சேர்மம்

புரோப்பியோலால்டிகைடு (Propiolaldehyde) என்பது HC2CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆல்க்கைன், ஆல்டிகைடு ஆகிய இரண்டு வேதி வினைக்குழுக்களையும் ஒன்றாகப் பெற்றுள்ள எளிய வேதிச் சேர்மத்திற்கு புரோப்பியோலால்டிகைடை எடுத்துக்காட்டாகக் கூறலாம். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் வெடிக்கும் தன்மை கொண்டதாகும்.[1]

புரோப்பியோலால்டிகைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்-2-யினல்
வேறு பெயர்கள்
புரோப்பைனல்; புரோப்பியோலிக் ஆல்டிகைடு
இனங்காட்டிகள்
624-67-9 Y
ChemSpider 11721
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12222
  • C#CC=O
UNII SJ8A65XF7N Y
பண்புகள்
C3H2O
வாய்ப்பாட்டு எடை 54.05 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.9152 கி/செ.மீ3
கொதிநிலை 54–57 °C (129–135 °F; 327–330 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வினைகள்

தொகு

ஆல்க்கைனைல் ஆல்டிகைடுக்கென எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரான் கவர் விளைவுகளை இந்த சேர்மம் வெளிப்படுத்துகிறது. இது ஒர் ஈரினோபைலாகவும் நல்ல் மிக்கேல் ஏற்பியாகவும் செயல்படுகிறது. கிரிக்கனார்டு வினையாக்கிகள் கார்பனைல் மையத்தில் சேர்கின்றன. [1] இதன் வெடிக்கும் பண்புகள் அதன் பலபடியாக்கல் வினையின் வெளிப்புற வெப்பத்திற்குக் காரணமாகிறது. [1]

தயாரிப்பு

தொகு

அக்ரோலீனிலிருந்து அசிட்டாலை தயாரிக்க இயலும்..[2]

தோற்றம்

தொகு

விண்மீன்களுக்கு இடையேயான ஊடகத்தில் புரோப்பைனல் காணப்பட்டது. இது கார்பன் மோனாக்சைடு-அசிட்டிலீன் அணைவுச் சேர்மத்திலிருந்து உருவாகும் என அனுமானிக்கப்படுகிறது.[3] தண்ணீருடன் புரோப்பைனலிடின் (C3H) வினையின் வழியாக தயாரிப்பது மற்றொரு சாத்தியமான பாதையாகும்..[4]

தீங்கு

தொகு

புரோப்பியோலால்டிகைடு பலபடியாகும் வினைக்கு உட்படுகிறது என்பதால் இது வெடிக்கும் தன்மை கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Encyclopedia of Reagents for Organic Synthesis".. (2001). DOI:10.1002/047084289X.rp262m. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471936237. 
  2. A. Le Coq and A. Gorgues (1979). "Alkyness via Phase Transfer-Catalyzed Dehydrohalogenatiion: Propiolaldehyde Diethyl Acetal". Organic Syntheses 59: 10. doi:10.15227/orgsyn.059.0010. 
  3. Zhou, Li; Ralf I. Kaiser (2008), "Pathways to Oxygen-Bearing Molecules in the Interstellar Medium and in Planetary Atmospheres: Cyclopropenone (c-C3H2O) and Propynal (HCCCHO)", The Astrophysical Journal, 686 (2), எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/591072
  4. Xie, Hong-bin; Chang-bin Shao (2007), "Radical-Molecule Reaction C3H + H2O on Amorphous Water Ice: A Promising Route for Interstellar Propynal", The Astrophysical Journal, 670 (1): 449–456, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/520757
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பியோலால்டிகைடு&oldid=3783342" இலிருந்து மீள்விக்கப்பட்டது