புரோமித்தியம்(III) பாசுபேட்டு

வேதிச் சேர்மம்

புரோமித்தியம்(III) பாசுபேட்டு (Promethium(III) phosphate) என்பது PmPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கதிரியக்கப்பண்பு கொண்ட இச்சேர்மத்தை கரையக்கூடிய புரோமித்தியம் உப்பு ஒன்றுடன் காரகாடித்தன்மைச் சுட்டெண் 3~4 மதிப்பு கொண்ட ஈரமோனியம் ஐதரசன் பாசுபேட்டைச் சேர்த்து அல்லது நீர்வேப்பவினையின் மூலம் பெறப்பட்ட ஈரமோனியம் ஐதரசன் பாசுபேட்டைச் சேர்த்து வினை புரியச் செய்வதால் இதன் நீரேற்றை வெளிர் மஞ்சள் நிற திண்மமாக வீழ்படிவாகப் பெற இயலும்.[2] இந்நீரேற்றை 960 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடாக்குவதன் மூலம் புரோமித்தியம்(III) பாசுபேட்டின் நிரிலி வடிவத்தை செந்நிறச் சிவப்பு நிறத்தில் பெறலாம்.[1] இச்சேர்மத்தின் உருவாதல் வெப்பம் −464 கிலோகலோரி/மோல் ஆகும்.[3]

புரோமித்தியம்(III) பாசுபேட்டு
promethium(III) phosphate
இனங்காட்டிகள்
14014-68-7 Y
பண்புகள்
PmPO4
வாய்ப்பாட்டு எடை 241.89
தோற்றம் வெளிர் மஞ்சள் திண்மம் (நீரேற்று)
செந்நிற சிவப்பு திண்மம் (நீரிலி)[1]
insoluble
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 F. Weigel, V. Scherer, H. Henschel (1965-07). "Unit Cells of the Monazite-Type Rare-Earth Phosphates" (in en). Journal of the American Ceramic Society 48 (7): 383–384. doi:10.1111/j.1151-2916.1965.tb14768.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7820. http://doi.wiley.com/10.1111/j.1151-2916.1965.tb14768.x. பார்த்த நாள்: 2021-01-16. 
  2. Nicolas Clavier, Nicolas Dacheux, Gilles Wallez, Michel Quarton (2006). "Hydrothermal Methods as a New Way of Actinide Phosphate Preparation" (in en). MRS Proceedings 985. doi:10.1557/PROC-985-0985-NN04-08. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-9172. https://www.cambridge.org/core/product/identifier/S1946427400060589/type/journal_article. பார்த்த நாள்: 2021-01-16. 
  3. Marinova, L. A.; Yaglov, V. N. Thermodynamic characteristics of phosphates of lanthanides. Zhurnal Fizicheskoi Khimii, 1976. 50 (3): 802. ISSN: 0044-4537.